(எம்.எப்.எம்.பஸீர்)

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­ கொலை குறித்த விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதன்­படி தற்­போது யாழ். பகு­தியில் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள, தற்­போ­தைய அமைச்­சரும் முன் னாள் இரா­ணுவத் தள­ப­தி­யு­மான பீல்ட் மார் ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு நெருங்­கிய புல­னாய்வு அதி­கா­ரிகள் பலரை விசா­ரணை வல­யத்­துக்குள் விசா­ர­ணை­யா­ளர்கள் கொண்­டு­வந்­துள்­ளனர். எதிர்­வரும் நாட்­களில் அவர்­க­ளிடம் லசந்­தவின் கொலை தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க குற் றப் புல­ன­ாய்வுப் பிரிவு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் சுட்­டிக் ­காட்­டினார். 

கடந்த வெள்­ளி­யன்று பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­சரும் முன்னாள் இரா­ணுவ தள­ப­தி­யு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் அதனை மையப்­ப­டுத்தி மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

இது­வரை லசந்­தவின் படு­கொலை குறித்து குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­க­ளுக்கு அமை­வாக பதிவு செய்­யப்­பட்­டுள்ள வாக்கு மூலங்கள் மற்றும் சாட்­சி­களின் படி விரைவில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­ விடம் இப்­ப­டு­கொலை தொடர்பில் விசா­ர­ ணைகள் நடத்­த­ப்பட்டு வாக்கு மூலம் பெறு­ வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் ஆரம்­பித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

கடந்த 2009 ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி இரத்­ம­லானை பகு­தியில் வைத்து தனது அலு­வ­லகம் நோக்கி காரில் செல்லும் போது லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை செய்­யப்­பட்டார். இத­னை­ய­டுத்து இக்­கொலை தொடர்­பி­லான விசா­ர­ணைகள் கல்­கிசை பொலி­ஸா­ராலும் பின்னர் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ராலும் முன்­னெ­டுக்­கப்­பட்டு கடந்த 2015 பெப்­ர­வரி முதல் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யா­ளர்­களால் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்­றது. 

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் நேரடி கட்­டுப்­பாட் டில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் சுதத் நாக­முல்­லவின் மேற்­பா­ர­்வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் திசே­ராவின் வழி நடத்­தலில் சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா மற் றும் பொலிஸ் பரி­சோ­தகர் சுதத் ஆகியோர் நடத்­திய குழு­வினர் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இதன் ஒரு அங்­க­மாக கடந்த வெள்ளிக் கிழமை முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சே­காவை குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைத்த விசா­ர­ணை­யா­ளர்கள் அவரை சுமார் 6 மணி நேரம் வரை அங்கு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வாக்கு மூலம் ஒன்­றினைப் பெற்­றுக் ­கொண்­டனர்.  வெள்­ளி­யன்று பிற்­பகல் வேளையில் கோட்­டை யில் உள்ள குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்குச் சென்ற அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விடம் இரவு சுமார் 7.50 மணி வரை விசா­ர­ணைகள் இடம்­பெற்­ற­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தக­வல்கள் தெரி­வித்­தன.

லசந்­தவின்கொலை­ யுடன் இராணுவ புல­னாய்வுப் பிரி­வுக்கு நெருங்­கிய தொடர்பு இருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் விசா­ர­ ணை­யா­ளர்கள், கொலை இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்­தவர் எனும் ரீதியில் சரத் பொன்­சே­கா­விடம், கொழும்பில் இரா­ணு வம் முன்­னெ­டுத்த கட­மைகள், இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்­களின் கட­மைகள் தொடர் பில் விசா­ரணை செய்­துள்­ளனர். இதனை விட கொலை­யா­னது இரத்­ம­லானை அதி பாது­க­ாப்பு வலய பகு­தியில் இடம்­பெற்ற நிலையில் அது குறித்தும் புல­னாய்­வா­ளர்­களின் விசா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்­தப்பட்­டுள்­ளது. இத­னை­ விட சரத் பொன்­சேகா வெளி மேடை­களில் லசந்த கொலை தொடர்பில் கூறிய விட­யங்­களை சுட்­டிக்­ காட்­டியும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளன.

இதே­வேளை முக்­கி­ய­மாக சரத் பொன்­ சேகா இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த போது அவ­ருக்கு உத­வி­யாக செயற்­பட்ட தற்­போது யாழ். பகு­தியில் சேவை­யாற்­று­வ­தாக கூறப்­படும் சில இரா­ணுவப் புல­னா ய்வு அதி­கா­ரி­க­ளையும் விசா­ரணை வல­யத்­துக்குள் கொண்­டு­வந்­துள்ள விசா­ர­ணை­யா­ளர்கள், அவர்கள் தொடர்­பிலும் பொன்­சே­கா­விடம் விசா­ரணை செய்­துள்­ளனர். இதன் போது அவர்கள் தொடர்­பிலும் தகவல் வழ ங்­கி­யுள்ள பொன்­சேகா, அவர்­களில் பலர் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளரின் கீழ் நேர­டி­யாக செயற்­பட்­ட­வர்கள் எனவும் அவர்கள் கொழும்பின் எந்­தெந்த முகாம்­களில் இருந்து இவ்­வாறு செயற்­பட்­டனர் என்­பது குறித்தும் வாக்கு மூலம் அளித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இந் நிலையில் ஏற்­க­னவே லசந்­தவின் மகள் அஹிம்ஷா விக்­ர­ம­துங்க அவுஸ்­தி­ரே­லி­யாவில் வைத்து புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்கள் சில தொடர்­பிலும் இதன்­ போது சரத் பொன்­சே­கா­விடம் வின­வப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் அப்­ப­டு­கொலை தொடர்பில் சரத் பொன்­சேகா வழங்­கி­யுள்ள வாக்கு மூலத்தை தற்­போது விசா­ர­ணை­யா­ளர்கள் ஆராய்ந்து வரும் நிலையில் லசந்­தவின் மகள் வழங்­கிய வாக்கு மூலத்­துடன் அதனை ஒப்­பீடு செய்து எதிர்­வரும் நாட்­களில் முன்னாள் பாது­ காப்பு செயலர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வை யும் இக்­கொலை விவ­காரம் தொடர்பில் விசா­ரணை செய்­வது குறித்து ஆராய்ந்து வரு­கின்­றனர்.

ஏற்­க­னவே இவ்­வி­சா­ர­ணை­க­ளுக்கு என 266 இரா­ணுவ வீரர்­களின் கைவிரல் ரேகை­களை புல­னாய்வுப் பிரி­வினர் சோதனை செய்­தி­ருந்த நிலையில் மேலும் 320 புல­னாய்­வா­ளர்­களின் கைவிரல் ரேகை கள் பரி­சோ­தனை மட்­டத்தில் உள்­ளன. இதனை விட லசந்­தவின் கொலை­யா­னது இரா­ணு­வத்­துக்கு என இறக்­கு­மதி செய்­யப்­பட்ட வேட்­டைக்கு பயன்­ப­டுத்­தப்­படும் போல்ட் கண் ரக துப்­பாக்­கியை ஒத்த ஆயு­ தத்­தினால் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ள­தாக குற் றப் புல­னாய்வுப் பிரி­வினர் சந்­தே­கிக்­கின்­ற னர். இத­னை­ விட லசந்த கொலை செய்­யப்பட்ட பின்னர் அது குறித்த விசா­ர­ணை­களை பயங்­க­ர­வாத புல­ன­ாய்வுப் பிரிவே முதலில் முன்­னெ­டுத்­தது. 

இதன் போது பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­பா­ள­ராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ரா வாகிஸ்ட இருந்தார். இதன் போது முதலில் 17 இரா­ணுவ புல­னாய் ­வா­ளர்கள் கைது செய்­யப்பட்­டனர். பின் னர் அவர்கள் விடு­விக்­கப்­பட்­டனர். இது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ரா வாகிஸ்டவிடம் விசாரணை நடத்தப் பட்டபோது,  தனது விசாரணையில் அவர் கள் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்களை இராணுவமே அனுப்பி வைத்த தாகவும் கூறியுள்ளார்.

 இதனைத் தொடர்ந்து புலனாய்வுப் பிரி வினர்  இராணுவத்திடம் அது குறித்து விளக்கம் கோரியுள்ளனர். இராணுவம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவித் தலை தொடர்ந்தே அந்த 17 பேரையும் அனு ப்பியதாக குறிப்பிட்டுள்ளனர். இத் தகைய முன்னுக்கு பின் முரணான தகவல்கள் மற் றும் சாட்சியங்களை மையப்படுத்தி தற் சமயம் சரத் பொன்சேகா வழங்கிய வாக்கு மூலம் ஒப்பீடு செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.