தெஹியத்தகண்டி, ஹெனானிகல தெற்கு பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றில் இன்று (4) காலை நீராடிக்கொண்டிருந்த ஹபராதுவ பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் 17 மற்றும் 19 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
தெஹியத்தகண்டி, ஹெனானிகல பிரதேசத்துக்கு நேற்று (03) பேருந்தில் 50 பேர் கொண்ட குழு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று (04) காலை இவர்கள் இருவரும் உள்ளடங்கிய குழுவினர் நீராடிக்கொண்டிருந்தபோதே குறித்த இரண்டு பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, ஏனையவர்களின் அலறல் சத்தம் கேட்டு பிரதேசவாசிகள் அங்கு சென்று, இரு இளைஞர்களையும் மீட்டு தெஹியத்தகண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இருப்பினும், இவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM