இலங்கை மக்கள் கூட்டாட்சி முறையின் தத்துவ சுவையை அறிய வேண்டும் - மனோ கணேசன்

Published By: Vishnu

04 Jun, 2023 | 07:52 PM
image

(பொன்மலர் சுமன்)

வடக்கு கிழக்கிலே வாழ கூடிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் கூட்டாட்சி முறையின் தத்துவ சுவையை அறிய வேண்டும். ஆகவே நாங்கள் எல்லோரும் சேர்ந்து சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து வாழ விரும்புகின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற முத்தமிழறிஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்வின்போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், கலைஞரிடம் அரசியலில் நான் கண்ட அடையாளம் அவர் ஜனநாயக கூட்டாட்சி தத்துவத்தின் ஒரு போராளிரூபவ் ஒரு செயற்பாட்டாளர், தத்துவஞானி. அவர் நேரு, இந்திராகாந்தி மற்றும் ஐனதா கட்சியில் பிரதமர் வாஜ்பாய் போன்றவர்களுடன் இணைந்து செயற்படுவதில் கூட்டாட்சி முறை என்பதில் தெளிவாக இருந்தார்.

கூட்டாட்சி என்பது அவசியமான விடயம். ஒரு கூறையின் வாழக் கூடிய பல்வேறு இனங்கள் பல்வேறு கலாசாரமுடையவர்கள் என அவர்களின் தனித்துவங்களையெல்லாம் அங்கீகரித்துக் கொண்டு கூட்டாட்சி செய்ய முடியும்.

இலங்கையென்பது ஒரு சிங்கள பௌத்த நாடு அல்ல. சிங்கள பௌத்தர்கள் என்பவர்கள் 25 சதவீதமானவர்களே. இதில் 75 சேர்ந்தால்தான் நூறு சதவீதமாகும். ஆகவே சிங்களவர்கள், தமிழ்ர்கள், முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் இணைந்த நாடாக, கூட்டாட்சி முறையினை ஏற்படுத்துவதற்காகவே நாம் போராடுகின்றோம்.

கூட்டாட்சியின் பிதாமகனும் நிர்வாகியுமான கலைஞர் தான் எதிரணியில் இருந்தும் கூட கட்சி கவிழ்ந்துவிடாமல் சோர்ந்துவிடாமல் உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

கலைஞர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் பலமுறை தமிழக முதல்வராக இருந்துள்ளார். எதிரணியில் இருந்திருக்கின்றார் மாநிலம் மற்றும் தேசியளவில் மறுக்க முடியாத ஒரு தலைவர். அரசியல் ரீதியாக இலங்கை மக்கள் வாக்களித்து அவர் ஆட்சிக்கு வரவில்லை.

அவரது கட்சி இலங்கையில் செயற்படும் கட்சியுமல்ல. அவர் இந்தியாவின் முன்னணி மாநிலமான தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று மக்களை ஆண்ட இன்றும் ஆண்டு கொண்டிருக்கின்ற கட்சியின் தலைவர். ஆக வாக்களித்த மக்களுக்கு பணியாற்றும் கடப்பாடு இருக்கிறது.

இதைவிடுத்து எங்களது இயலாமை காரணமாக கலைஞரையோ அவரது மகன் ஸ்டாலியையோ அல்லது தமிழகத்தின் வேறு தலைவர்களையோ குறை கூறுவது முறையற்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வுகாண...

2024-05-26 15:10:14
news-image

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு...

2024-05-26 19:35:01
news-image

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சடலமாக மீட்பு...

2024-05-26 19:18:44
news-image

மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார...

2024-05-26 19:08:02
news-image

ஒரு மாதத்துக்குள் உறுதியான தீர்மானத்தை ஜனாதிபதி...

2024-05-26 18:20:46
news-image

மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து...

2024-05-26 18:08:24
news-image

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன்...

2024-05-26 18:07:40
news-image

வேன் விபத்தில் ஒருவர் பலி ;...

2024-05-26 18:25:50
news-image

ஜனாதிபதியின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

2024-05-26 17:53:19
news-image

மன்னாரில் பிரமாண்டமாக இடம்பெற்ற தேசிய மக்கள்...

2024-05-26 17:59:03
news-image

கைத்துப்பாக்கி , வெற்று தோட்டாக்கள் புதைக்கப்பட்ட...

2024-05-26 17:50:05
news-image

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு...

2024-05-26 17:26:01