(இராஜதுரை ஹஷான்)
மாதாந்த விலை சூத்திரத்துக்கு அமைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் திருத்தப்பட்ட புதிய விலை 3186 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1281 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 598 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறைப்பு, தேசிய மட்டத்தில் ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தல், டொலரின் பெறுமதி குறைப்பு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, புதிய விலை நிர்ணயம் இன்று முதல் அமுல்படுத்தப்படும். சந்தையில் பற்றாக்குறை இல்லாமல் சிலிண்டர்களை விநியோகிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரியான முதித பீரிஸ் தெரிவித்தார்.
மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய கடந்த மாதம் (மே) 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 100 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 40 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 19 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM