இலங்கை ஆசியாகிண்ணப்போட்டிகளை நடத்துவதற்கு முன்வந்ததால் சீற்றமடைந்த பாக்கிஸ்தானின் கிரிக்கெட் சபை இலங்கையில் ஒருநாள் போட்டிகளில் விளையாட மறுத்துள்ளது.
பாக்கிஸ்தானில் ஹைபர்மொடல் அடிப்படையில் நான்கு ஆசியகிண்ணப்போட்டிகளை நடத்தவேண்டும் என பாக்கிஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அனைத்து போட்டிகளையும் நடத்துவதற்கு இலங்கை முன்வந்துள்ளதை தொடர்ந்து பாக்கிஸ்தான் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைகளிற்கு இடையிலான உறவுகள் பாதிப்படைந்துள்ளன.
இலங்கையில் அடுத்தமாதம் பாக்கிஸ்தான் சில ஒருநாள்போட்டிகளில் விளையாடுவதற்கான யோசனையை பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை நிராகரித்துள்ளதை தொடர்ந்து இருநாடுகளினதும் கிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபைகளிற்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐசிசிவேர்ல்ட் சம்பியன்சிப்பின் ஒருபகுதியாக அடுத்தமாதம் பாக்கிஸ்தான் அணி இலங்கையில் இரண்டு டெஸ்ட்போட்டிகளை விளையாட உள்ளது.
இந்த நிலையில் பாக்கிஸ்தான் சில ஒருநாள் போட்டிகளை விளையாட வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதற்கு முதலில் இணங்கிய பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை பின்னர் இந்த வேண்டுகோளை நிராகரித்துள்ளது.
செப்டம்பரில் ஆசிய கிண்ணப்போட்டிகளை நடத்த இலங்கை முன்வந்துள்ளமை குறித்து பாக்கிஸ்தான் அதிருப்தியடைந்துள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM