இலங்­கை­ய­ராக வாழ வேண்­டு­மாயின் எமது மதம், மொழி என அனை த்து அம்­சங்­களும் சிங்­கள பௌத்தம் சார்ந்­த­தாக இருக்க வேண்டும் என்ற நிலைப்­பாடு மாறி­விட்­டது. 

எனவே இன்று சிங்க கொடிக்கு கொடுக்­கப்­ப­டு­கின்ற முக்­கி­யத்தும் நந்­திக்­கொ­டிக்கும் வழங்­கப்­பட வேண்டும் என தேசிய சக­வாழ்வு நல்­லி­ணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

கொழும்பு கதி­ரேசன் வீதி கதிர்­வே­லா­யுத சுவாமி ஆல­யத்தில் அற­நெறி பாட­சா­லை­யினை அங்­கு­ரார்­பணம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று நடை­பெற்­றது. இதில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போது நாம் இலங்­கை­ய­ராக சிங்க கொடி­யினை முன்­னிலை படுத்­து­வதில் மாத்­திரம் திருப்­ப­தி­ய­டை­யாமல் நந்­திக்­கொ­டி­யி­னையும் உள்­வாங்கி திருப்­பி­ய­டைய வேண்டும் அதுவே சமத்­துவம். உண்­மை­யான தேசி­யமும் அது­வே­யாகும்.

ஆனால் இன்று சில­ருக்கு சிங்கம் மாத்­தி­ரமே தேசி­ய­மாக உள்­ளது. சிங்கம் மட்டும் தேசிய அல்ல ஆனால் சிங்­கத்­தினை தேசியம் என்று கருதி திருப்­தி­ய­டைந்­து­வி­டு­வார்கள். சிங்கம் மட்டும் தேசியம் என்று கரு­து­ப­வர்கள் சிங்­கத்தின் பால் சர­ண­டைந்­து­விட்­டனர் அது தேசி­ய­மல்ல.

மற்றும் சிலர் நந்­தியை மாத்­திரம் முதற்­கொண்டு செயற்­ப­டு­கின்­றனர்.  அதுவும் கிடை­யது நந்தி மட்டும் தேசியம் என்றால் அதனை இன­வாதம் அல்­லது தீவி­ர­வாதம் என்றே கருத வேண்டும். எனவே இரண்­டையும் சம­மாக கருத வேண்டும் ஒரு புறம் நந்தி மறு­புறம் சிங்­களம் என்ற கோணத்­தி­லி­ருந்து நாம் பார்க்க வேண்டும்.

இவை இரண்டும் இருந்தால் மாத்­தி­ரமே நாம் இந்த நாட்டில் இந்­து­வா­கவும் தமி­ழ­னா­கவும் இலங்­கை­ய­ள­னா­கவும் வாழ முடியும். அவற்றில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வதில் அர்த்­த­மில்லை ஆனால் நாம் இலங்­கையர் என்­ப­தனால் இந்து என்­ப­தையும் தமிழர் என்­ப­தையும் விட்­டுக்­கொ­டுக்­கவும் முடி­யாது.

தமிழ் என்ற கார­ணத்­திற்­கான இலங்­கையர் என்­றதை விடுக்­கவும் தேவை­யில்லை.முன்பு நாம் இலங்­கை­ய­ராக இருக்க வேண்­டு­மாயின் சிங்­க­ள­வ­ரக இருக்க வேண்டும் சிங்­கள மொழி பேச வேண்டும் என்று நிலைமை இருந்­தது அவ்­வா­றான நிலைமை இன்று இல்லை.

சிங்­க­ளவர் முதல் தர இலங்­கையர் என்றும் மற்­றை­யவர் அடுத்­த­டுத்த தரத்தில் உள்­ள­வர்கள் என்ற கருத்­தி­னையும் நாம் இன்று தகர்த்­துள்ளோம். அகவே இன்று தமி­ழ­னா­கவும் இந்­து­வா­கவும் இருக்­கின்ற அதே­வேளை நாம் இலங்­கை­ய­னா­கவும் இருக்க வேண்டும்.

இந்த அறிவு சக­ல­ருக்கும் இருக்க வேண்டும். இந்த அறிவு அர­சாங்­கத்­திற்கும் உள்­ளது அர­சாங்­கத்தின் ஜனா­தி­ப­திக்கும் இது தொடர்பில் அறி­வுள்­ளது. பிர­தரும் அமைச்­ச­ர­வைக்கும் இந்த அறிவு உள்­ளது. துறைசார் அமைச்­ச­ருக்கும் உள்­ளது அதனால் சிங்க கொடி­யினை உயர்த்தி தேசி­யத்தை போற்­றி­னாலும் எமது இனம் மதம் என்ற தனித்­து­வ­தினை மறந்­து­வி­டக்­கூ­டாது.

தமி­ழ­ருக்கும் ஈழத்­த­மிழர், மலை­யகத் தமிழர் என்று வேறு­பாடு உள்­ளது அவை வர­லாறு அவையும் இருக்­கதான் வேண்டும். அந்த தனித்­து­வங்கள் உள்­வாங்­கப்­ப­டு­வது சிறந்­தது ஆனால் இலங்­கை­ய­ராக இருக்க வேண்டும். இந்த ஆட்சி மொழிகள் இன்று எமது நாட்டின் ஆட்சி மொழி­யாக உள்­ளன பறங்­கிய, ஆபி­ரிக்­கர்கள், மலை­யா­ளத்­தினை சேர்ந்­த­வர்கள் என 19 இனத்­தவர் இலங்­கையில் உள்­ளனர்.

எனவே சிங்­கள பெளத்தம் மட்­டு­மல்ல இலங்கை 19 மதங்கள், 3 மொழி­களை சேர்ந்தால் தான் அது இலங்­கை­யாக இருக்கும். எனவே சிங்­களம், பெளத்தம் மாத்திரம் இலங்கையர் என்ற நிலைப்பாட்டினை தூக்கியெறிந்துவிட்டோம். இதனை சிங்கள தலைவர் மத்தியிலும் கூட நாம் கூறியுள்ளோம்.

மாறான தமிழர்கள் மத்தியில் பேசிவிட்டு தமிழ் தேசிய வாத்தினை தூண்டிவிட்டு செயற்பட நாம் தயாராக இல்லை. மக்கள் நிராகரித்தால் அரசியலிருந்து செல்லவும் தயாராகவே உள்ளேன் என்றார்.