ஊடகங்கள்மீது அடக்குமுறை பிரயோகிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியை முறியடியுங்கள் - மக்கள் போராட்ட இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடு

Published By: Digital Desk 5

03 Jun, 2023 | 07:24 PM
image

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்ட இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளது.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அண்மையில் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, அதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன் ஓரங்கமாக மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளனர். 

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்த சட்டத்தின் ஊடாக அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்குத் தயாராகிவருவதாகவும், எனவே இவ்விடயத்தில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறும் அம்முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் சானக பண்டார, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஓர் உறுப்புநாடு எனவும், ஆகவே மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்குவதற்குத் தயாராகிவரும் அரசாங்கத்தின் இந்நடவடிக்கையில் ஐ.நா உடனடியாகத் தலையிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

'பொதுமக்கள் தகவல்களை அறிந்துகொள்வதற்குத் தாம் கொண்டிருக்கும் உரிமையை ஊடகங்களின் வாயிலாகவே அனுபவிக்கின்றனர். இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது அரசாங்கமும் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு முற்படுகின்றனர்' என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 'ஊடகங்கள்மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் பொதுவானதொரு கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. ஆனால் சர்வாதிகாரிகளால் எப்போதும் நாட்டை ஆளமுடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் அத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடித்துவிடுவார்கள்' என்றும் சானக பண்டார எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 19:54:35