மகனை கண்டுபிடிக்க உதவுங்கள் - உடலையாவது கண்டுபிடிக்க உதவுங்கள் - விபத்து இடம்பெற்ற இடத்தில் நின்று கதறும் தந்தை குவித்து வைக்கப்பட்டுள்ள உடல்களிற்குள் உறவுகளை தேடும் அவலம்

Published By: Rajeeban

03 Jun, 2023 | 03:10 PM
image

மூன்று புகையிரதங்களின் பெட்டிகள் சிதைந்துபோன நிலையில் ஒன்றாக காணப்படுகின்றன.

சில பக்கவாட்டில் காணப்படுகின்றன-மற்றவை  மிகவும் உயரமாக தூக்கிவீசப்பட்டதால் நிலத்தில் விழுந்தவேளை முற்றாக சேதமடைந்துள்ளன.

பெட்டிகளிற்கு அருகில் உடல்கள் வெள்ளை துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன- அம்புலன்ஸ்கள் உள்ளுர் கார்கள் டிரக்டர்கள் மூலம் உள்ளுர் மருத்துவமனைகளிற்கு கொண்டு செல்லப்படுவதற்காக அவை காத்திருக்கின்றன.

பயணிகளின் உடமைகள் காலணிகள் விளையாட்டு பொருட்கள் சிதறிக்காணப்படுகின்றன - சூட்கேஸ்கள் திறந்த நிலையில் காணப்படுகின்றன.

இது இரண்டுதசாப்தகாலத்தில் இந்தியா சந்தித்த மிகமோசமான புகையிரதவிபத்தின் பின்னர் அந்த பகுதியில் காணப்படும் காட்சிகள் - வெள்ளிக்கிழமை இரவு கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு செல்லும் கொரமென்டல் எக்ஸ்பிரஸ் கிழக்குஇந்திய நகரான ஒடிசாவில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த புகையிரதத்துடன் மோதியது. நிறுத்திவைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் சில பெட்டிகள் எதிர்தண்டவாளத்தில் பயணித்துக்கொண்டிருந்த ஹவ்ரா புகையிரதத்துடன் மோதின.

சனிக்கிழமை காலை அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280ஐகடந்துவிட்டது.  900 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானவர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மோப்பநாய்களையும் இரும்புகளை வெட்ட பயன்படுத்தப்படும் சாதனங்களையும் பயன்படுத்திசிதைவடைந்த பெட்டிகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்க்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

விபத்தில் சிக்குண்டுள்ளவர்களி;ன் உறவினர்கள் அவசரஅவசரமாக விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்து தங்கள் உறவுகளை தேடிவருகின்றனர், 

அவர்களில் 53 வயது ரபீந்திரா சாவும் ஒருவர் அவர் சாலிமரிலிருந்து கொரமண்டல் எக்ஸ்பிரசில் பயணம் செய்த தனது மகன் கோவிந்தாவை தேடுகின்றார்.

தயவு செய்து எனது மகனை கண்டுபிடிக்க உதவுங்கள் - மகனின் உடலையாவது கண்டுபிடிக்க உதவுங்கள் என அவர் ஒவ்வொரு உடல்களாக பார்த்தபடி அவர் கதறுகின்றார்.

கோரமன்டல் எக்ஸ்பிரசின் 23 பெட்டிகளில் பத்து பெட்டிகளாவது பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. ஹவ்ரா எக்ஸ்பிரசின் இரண்டு பெட்டிகள் தலைகீழாக காணப்படுகின்றன.

அவற்றில் பயணித்தவர்கள் தங்கள் அனுபவங்களை விபரித்தனர்.

தனது மூத்த சகோதரர் அப்துல்சேக்கினையும் அவரது மகன் மெஹ்ராஜ் சேக்கினையும் மூன்று அயலவர்களையும் தேடுகின்றார் சேக் ஜாஹிர் ஹ_சைன்  அவர்கள் அனைவரும் சாலிமர் எக்ஸ்பிரசில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தவர்கள் - வேலைவாய்ப்பு தேடி புறப்பட்டவர்கள் .

விபத்து குறித்த செய்தியை கேட்டதை தொடர்ந்து நான் எனது சகோதரரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன் என தெரிவித்த சேக் ஜாஹிர் ஹ_சைன் அவர்களின் தொலைபேசிகள் செயல் இழந்துள்ளன நான் மருத்துவமனையிலிருந்து மருத்துவமனையாக சென்றுகொண்டிருக்கின்றேன் இதுவரை எந்த தகவலும் இல்லை- விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்று அடுக்கிவைக்கப்பட்டிருந்த உடல்கள் மத்தியில் அவர்களை தேடினேன் 100 பேரின் முகங்களை பார்த்தேன் ஆனால் எனது உறவினர்கள் அயலவர்களை காணவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

guardian

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48
news-image

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்...

2023-09-25 11:43:22
news-image

பசும்பால் விற்க இடையூறு : மதுபானசாலைகளுக்கு...

2023-09-25 11:02:40
news-image

மறுக்க முடி­யாத உரிமை

2023-09-24 19:45:52
news-image

ஜனா­தி­ப­தியின் அதிகப் பிர­சங்­கித்­தனம்

2023-09-24 19:46:10
news-image

தனி வழி செல்­வ­தற்கு கள­ம­மைக்கும் பஷில்

2023-09-24 19:46:51
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒத்துழைப்பை வலியுறுத்தும் ஆசிய...

2023-09-24 19:47:49
news-image

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் பண ...

2023-09-24 19:48:27
news-image

வளர்ந்து வரும் ஆப்பிரிக்க சக்திகளின் எழுச்சி

2023-09-24 19:53:55
news-image

ஒஸ்லோ உடன்படிக்கையும் மரணித்துவிட்டது

2023-09-24 19:54:17
news-image

இந்­திய - கனே­டிய இரா­ஜ­தந்­திர முறுகல்...

2023-09-24 15:36:36