கண்டி கொழும்பு பிரதான வீதியில் பஸ்யால பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளதோடு 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 5.40 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.

இவ்விபத்து பஸ் உடன் லொறி மோதுண்டதாலே இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து காரணமாக கண்டி - கொழும்பு பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.