யாழில் 'சுயமரியாதை நடைபவனி - 2023'  

Published By: Nanthini

03 Jun, 2023 | 12:41 PM
image

சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு 'யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் - 2023' நிகழ்ச்சித் திட்டமாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நடைபவனி இடம்பெறவுள்ளது. 

இவ்வருடம் 'பெருமிதத்தின் வண்ணங்களின் ஒருங்கிணைவு' என்ற கருப்பொருளிலான சுயமரியாதை மாதக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக யாழில் இடம்பெறும் நடைபவனி, யாழ். பேருந்து நிலையத்தின் முன்னால் ஆரம்பமாகவுள்ளது.  

இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்தும், LGBTIQA+ சமூகத்தினரும் சக மனிதர்களாக கருதப்பட்டு, அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு மதிக்கப்படவும் வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வகையிலேயே இந்நடைபாதை இடம்பெறவுள்ளது. 

LGBTIQA+ சமூகத்தினர் ஒடுக்குமுறைகளுக்கும் பாலின பாகுபாடுகளுக்கும் உட்படுத்தப்படாமல் வாழ்வதே இந்த சுயமரியாதை நடைபவனியின் நோக்கமாகும். 

சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படை இலக்காகக் கொண்டு ஒருங்கமைக்கப்பட்டுள்ள இந்த நடைபவனி, யாழ். பேருந்து நிலையம் முன்னாலிருந்து ஆரம்பமாகி, சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து, பண்ணை வீதியூடாக பொலிஸ் நிலைய வீதி, பொது நூலக வீதி, வைத்தியசாலை வீதி ஊடாக நகர்ந்து, ஆரிய குளத்துக்கு முன்பாக நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சந்தோஷ் நாராயணனின் பிரமாண்ட இசை...

2023-09-25 21:57:12
news-image

கொய்கா - அகோஃப் அறிவுப் பரப்புரைத்...

2023-09-25 13:04:39
news-image

கேகாலை புனித அன்னை மரியாள் தேவாலயத்தின்...

2023-09-25 10:35:59
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்...

2023-09-24 19:04:27
news-image

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை யாழில்...

2023-09-24 15:02:28
news-image

நல்லூரில் திலீபன் நினைவாக ஆவணக் காட்சியகம்...

2023-09-23 19:52:35
news-image

திருமலை, பாலையூற்று சீரடி நாக சாயி...

2023-09-23 18:47:23
news-image

ஈஷ்வரலயா கலைக்கூடத்தின் பரதநாட்டிய நிகழ்வு

2023-09-23 18:29:15
news-image

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை...

2023-09-23 18:06:29
news-image

பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு

2023-09-23 19:40:52
news-image

விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

2023-09-22 18:32:02
news-image

1500 ஓவியங்களைக் கொண்ட 3 நாள்...

2023-09-22 18:36:44