கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம் இன்று

Published By: Digital Desk 3

03 Jun, 2023 | 02:36 PM
image

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் திருவிழா இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்திற்கு முன்னதாக காலை 6 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

கொடியேற்றத்தை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான வழிபாடுகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆராதனை நடைபெறும். 

திருவிழா தினமான 13 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.

இதேவேளை, பெருவிழா திருப்பலிகள் அன்றையதினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் தமிழ் மொழியிலும் காலை 10 மணிக்கு மறை மாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா தலைமையில் சிங்கள மொழியிலும் நண்பகல் 12 மணிக்கு மறை மாவட்ட துணை ஆயர் அன்ரனி ஜயக்கொடி ஆண்டகை தலைமையில் ஆங்கில மொழியிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16
news-image

வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறைக்காக நாணய நிதியத்தின்...

2025-03-14 16:40:45
news-image

பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமித்து ஜே.வி.பி.யினரிடமும் விசாரணைகள்...

2025-03-14 22:11:35