தோனியின் முழங்கால் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு!

Published By: Nanthini

03 Jun, 2023 | 10:43 AM
image

(என்.வீ.ஏ.)

சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் மஹேந்த்ர சிங் தோனிக்கு முழங்கால் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

மும்பை மருத்துவமனையில் எலும்பியல் நிபுணர் டாக்டர் டின்ஷா பாதிவாலா சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்தார்.

16ஆவது ஐ.பி.எல். அத்தியாயத்தில் முழங்காலில் கடும் உபாதைக்கு மத்தியில் விக்கெட் காப்பாளராக விளையாடிய தோனி, மத்திய பின்வரிசையில் துடுப்பெடுத்தாடி வந்தார். அதுவும் இரசிகர்களை பரவசப்படுத்தவே கடைசி ஓவர்களில் களம் புகுந்து துடுப்பெடுத்தாடினார்.

விக்கெட்களுக்கு இடையில் ஓடுவதில் சிரமத்தை எதிர்கொண்ட தோனி, சில பந்துகளை எதிர்கொண்டபோதும், அவற்றை சிக்ஸ் அல்லது பவுண்டறியாக்கி இரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.

குஜராத்துடனான இறுதிப் போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தபோதிலும் சென்னை சுப்பர் கிங்ஸை 5 விக்கெட்களால் வெற்றிபெறச் செய்து, 5ஆவது தடவையாக சம்பியனாக்கி இருந்தார்.

கடந்த திங்கட்கிழமை ஒதுக்கப்பட்ட நாளில் நடத்தப்பட்ட இறுதிப் போட்டியின் பின்னர், மும்பை சென்ற தோனி, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டார். எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பாதிவாலாவிடம் ஆலோசனை நடத்தினார்.

தோனியின் இடது முழங்காலை நன்கு பரிசோதித்த டாக்டர் பாதிவாலா உடனடியாக சத்திர சிகிச்சை செய்யுமாறு தோனிக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தோனிக்கு இடது முழங்காலில் வெற்றிகரமாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.

இதேவேளை, இறுதிப் போட்டி முடிவில் உடல் ஈடுகொடுத்தால், அடுத்த வருடமும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதாக தோனி குறிப்பிட்டிருந்தார். அதற்கு 8 - 9 மாத கால அவகாசம் தேவை எனவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருபதுக்கு - 20 இல் நேபாளம்...

2023-09-27 15:10:16
news-image

இளைஞர் விளையாட்டு விழா கடற்கரை கரப்பந்தாட்டடம்...

2023-09-27 10:24:38
news-image

லீக் பிரதிநிதிகள் கால்பந்தாட்ட மறுமலர்ச்சிக்காக மனச்சாட்சிக்கு...

2023-09-27 10:31:59
news-image

ஹசரங்க உபாதையிலிருந்து மீண்டால் மாற்று வீரராக...

2023-09-27 09:51:56
news-image

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023-09-26 11:18:45
news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59