சூடான் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்தது

Published By: Sethu

02 Jun, 2023 | 03:20 PM
image

சூடானின் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி, அமைதியை சீர்குலைத்தமைக்காக பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அப்தேல் பத்தாஹ் அல் புர்ஹான் தலைமையிலான சூடான் இராணுவத்துக்கும் மொஹம்மத் ஹம்தான் டக்லோ தலைமையிலான, ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவப் படையினருக்கும் இடையில் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைபெறும்  மோதல்களால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் அனுசரணையுடன் சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலிருந்து தான் விலகுவதாக சூடான் இராணுவம் நேற்றுமுன்தினம் அறிவித்தது. 

அதன்பின் சூடான் தலைநகர் கார்ட்டூமில் நடந்த தாக்குதல்களில் 19 பேர் பலியானதுடன் 105 பேர் காயமடைந்தனர் என மனித உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வன்முறைகள் நீடிப்பதற்கு காரணமானவர்களுக்கு பொருளாதாரத் தடைகளையும், விசா கட்டுப்பாடுகளையும்  அமெரிக்கா விதிப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலீவன் கூறியுள்ளார்.

4 நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளளது. இவற்றில் இரு நிறுவனங்கள் சூடான் இராணுவத்துடன் தொடர்புடையவை. 

ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவப் படையின் தளபதி டக்லோ மற்றும் அவரின் இரு சகோதரர்களினால் நடத்தப்படும் இரு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.  

சூடானில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைபெறும் மோதல்களால் குறைந்தபட்சம் 1800 பேர் உயிரிழந்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27
news-image

காசா பெரும் ரியல் எஸ்டேட் பகுதி-இடித்து...

2025-02-10 11:01:36
news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24
news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03