இலங்கையிலிருந்து கடத்திச் சென்ற தங்கக் கட்டிகளை இந்திய கடலில் வீசிய கடத்தல்காரர்கள் : ஸ்கூபா வீரர்களின் உதவியோடு தங்கத்தை மீட்ட இந்திய கடலோர காவல்படை

02 Jun, 2023 | 01:20 PM
image

இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை ஸ்கூபா வீரர்களின் உதவியோடு இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கை நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக சர்வதேச கடலோர எல்லையில் இந்திய-இலங்கை கடற்படை தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கையை மீறி கடத்தல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதிவு எண் இல்லாத பைபர் படகு ஒன்று சந்தேகப்படும்படி, மணலி தீவு அருகே நின்று கொண்டிருந்தது. இந்திய கடலோர காவல் படையினரை பார்த்த உடன் படகிலிருந்தவர்கள் தப்பி செல்ல முயன்றதுடன் கடலில் இரண்டு பார்சல்களை வீசியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் பைபர் படகை மடக்கி பிடித்தனர். படகில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் படகில் இருந்த வேதாளையை சேர்ந்த இருவர் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஒருவர் என மூவரையும் இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடலில் வீசப்பட்ட பார்சல்களை மீட்பதற்காக மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அருகில் இருந்து ஸ்கூபா டைவர்ஸ், முத்து குளிக்கும் மீனவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பிடிபட்ட இருவரை அழைத்து கொண்டு மணலி மற்றும் சிங்கிலி தீவு அருகே உள்ள கடல் பகுதிக்கு சென்று கடலுக்கு அடியில் தங்கத்தை தீவிரமாக தேடினர்.

ஆனால் மாலை வரை தேடியும் கடத்தல் தங்கம் கிடைக்காததால் அவர்கள் வெறும் கையுடன் கரை திரும்பினர். இந்நிலையில் இன்றும் தொடர்ந்த இந்த தேடுதல் பணியில், சுமார் 2 முதல் 3 மணி நேரத்திற்கு உள்ளாகவே கடலில் வீசப்பட்ட பார்சல்களை ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படை அதிகாரிகள் மீட்டனர். மேலும் கைப்பற்றப்பட்ட தங்கத்தை மண்டபம் கடலோர காவல் படை முகாமில் வைத்து நகை மதிப்பீட்டாளரை கொண்டு எடை போடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47