B.H. அப்துல் ஹமீத் எழுதிய 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் அறிமுக விழா 

Published By: Nanthini

02 Jun, 2023 | 11:53 AM
image

உலகத் தமிழ் அறிவிப்பாளர் B.H. அப்துல் ஹமீத் எழுதிய 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் அறிமுக விழா கொழும்பு - 7இல் அமைந்துள்ள அழகியற் கற்கை அரங்கில் நாளை சனிக்கிழமை ஜூன் 3ஆம் திகதி மாலை 3 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் நிகழ்ந்த FETNA விழாவில் வெளியிடப்பட்ட இந்நூல், அடுத்து கனடா, இங்கிலாந்து, இந்தியா (தமிழ்நாடு) ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து, தற்போது இலங்கையில் இதன் அறிமுக விழா வெண்பா நூல்மனையின்  ஒருங்கிணைப்பில் நிகழ்கிறது. 

சிரேஷ்ட அறிவிப்பாளர் விமல் சொக்கநாதனின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் மூத்த வானொலி அறிவிப்பாளரும் முன்னாள் பிரதிப் பரீட்சை ஆணையாளருமான G. போல் அந்தனி மற்றும்  'தகவம்' செயலாளரும் இலக்கியச் செயற்பாட்டாளருமான வசந்தி தயாபரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளனர். 

அத்துடன், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் (வீரகேசரி) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் இந்நூலினை வெளியிடவுள்ளார். 

‍தொடர்ந்து, பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரனின் சிறப்புரை இடம்பெறும். 

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி எம்.சி. ரஸ்மின் மற்றும் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் ஆகியோர் நூல் நயவுரையினை வழங்கவுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35
news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46