( எம்.நியூட்டன்)
SLIIT மற்றும் Northern uni ஆரம்ப நிகழ்வு 18-05-2023 வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
நிகழ்வில் பல்கலைகழக பீடாதிபதிகள், போராசிரியர்கள் , விரிவுரையாளர்கள், நிர்வாகத்தினர் , மாணவர்கள் , பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அதன்போது, பல்கலைகழகத்தின் கற்றல் முறமைகள் தொடர்பிலும், விரிவுரைகள் தொடர்பிலும், பல்கலைகழக கற்கை நெறிகள் தொடர்பிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
அத்துடன், உள்ளூர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு உயர்தர மற்றும் வேலை சார்ந்த இளங்கலை பட்டங்களை வழங்கும் நோக்குடன் 4 வருட கணினி மற்றும் வணிகப் பட்டங்களை யாழ்ப்பாணத்தில் NorthernUni ஆரம்பித்துள்ளது.
NorthernUni இன் வலுவான தொழில் தொடர்புகள் மாணவர்களுக்கு தொழில் தொடர்புகள், பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறைகளில் எதிர்காலத்தில் மிக சிறப்பான திறன்களுடன் மாணவர்கள் பட்டம் பெறுவார்கள். Northern uni என்பது ஒரு முழு அளவிலான வளாகம், அதிநவீன கணினி ஆய்வகங்கள், தொழில்நுட்ப வகுப்பறைகள், நவீன நூலகம் என்பவற்றுடன் கற்பித்தல் மற்றும் சிறப்பான கற்றல் சூழலை உள்ளடக்கியதாக இருக்கும் என பலகலைக்கழக ஆரம்ப நிகழ்வில் நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM