பூஜையுடன் தொடங்கிய பிரபு தேவாவின் 'பேட்ட ராப்'

Published By: Ponmalar

02 Jun, 2023 | 10:57 AM
image

'நடனப்புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராக இருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'பேட்ட ராப்: என பெயரிடப்பட்டு அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இத்துடன் படத்திற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

மலையாள இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம் 'பேட்ட ராப்'. இதில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வேதிகா நடிக்கிறார்.

இவர்களுடன் விவேக் பிரசன்னா, பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் சாஜோன், மைம் கோபி, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

திரைக்கதையை டினில் பிகே எழுத, ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ககிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க டி. இமான் இசையமைக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரிக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. ஜூன் 15 ஆம் திகதி முதல் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி தொடர்ந்து நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'கடைசி வரை 'குட் பேட் அக்லி'...

2025-04-18 09:45:53
news-image

நடிகர் சிவ ராஜ்குமார்-  உபேந்திரா நடித்திருக்கும்...

2025-04-18 09:22:29
news-image

மறுமணம் செய்துகொண்டார் தொகுப்பாளினி பிரியங்கா

2025-04-17 15:25:52
news-image

மனநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் ஸ்ரீ

2025-04-17 11:22:22
news-image

கருத்தரிப்பு மையங்களின் பின்னணியில் உருவாகும் '...

2025-04-17 03:50:38
news-image

தூசு தட்டப்படும் பிரபு தேவாவின் 'யங்...

2025-04-17 03:48:27
news-image

‘குட் பேட் அக்லி’யிடம் நஷ்டஈடு கோரிய...

2025-04-16 16:10:52
news-image

“அதிரன்” கிராமத்து மண்வாசனையோடு நகரும் காதல்...

2025-04-16 13:31:17
news-image

நிவின் பாலியின் 'டோல்பி தினேஷன்' பட...

2025-04-16 11:24:40
news-image

விமல் - யோகி பாபு இணையும்...

2025-04-16 03:43:25
news-image

வெங்கட் பிரபு வெளியிட்ட பிரேம்ஜி அமரனின்...

2025-04-16 03:38:39
news-image

நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் 'மைனே...

2025-04-16 03:34:32