சமுத்திரகனி நடிக்கும் 'விமானம்' பட முன்னோட்டம் வெளியீடு

Published By: Ponmalar

02 Jun, 2023 | 10:43 AM
image

சமுத்திரகனி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'விமானம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை முன்னணி நட்சத்திர நடிகையான அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டார். 

இயக்குநர் சிவ பிரசாத் யெனலா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'விமானம்'. இதில் சமுத்திரக்கனி, மீரா ஜாஸ்மின், அனுசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், மாஸ்டர் துருவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விவேக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார். விளிம்பு நிலை குடும்பத்தை சார்ந்த ஏழை சிறுவன் ஒருவன் ஆகாய விமானத்தில் பறக்க விரும்புவதை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி ஸ்டூடியோஸ் எனும் நிறுவனத்திற்காக தயாரிப்பாளர் கிரண் கொரப்பட்டி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னோட்டத்தில் சமுத்திரகனி மாற்றுத்திறனாளியாகவும், அவருடைய மகனின் சக்திக்கு மீறிய ஆசையை நிறைவேற்றுவது தொடர்பான காட்சிகளும் இடம் பெற்றிருப்பதால் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படம் இம்மாதம் ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37