கொள்ளுப்பிட்டியில் காணி ஒன்றை விற்பனை செய்து பங்குதாரர்கள் குழுவொன்றிடம் இருந்து சுமார் 195 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டமை தொடர்பிலான சி.ஐ.டி. விசாரணையை இடைநிறுத்துமாறு பெரும்பான்மை பங்குதாரரான ஜனாதிபதி சட்டத்தரணி அஜித் பத்திரன விடுத்த கோரிக்கையை கோட்டை நீதிவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.
பிரதான சந்தேகநபரான பிரித்தானிய பிரஜை கதிரவேல் சற்குணம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அஜித்பத்திரண ஆஜராகியிருந்தார்.
2004 ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி காலி வீதியில் 219.5 பேர்ச்சஸ் காணியை கொள்வனவு செய்தமை தொடர்பிலான முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் பத்து பங்குதாரர்கள் 1.3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை முதலீடு செய்துள்ளனர். குறித்த காணி பின்னர் ஜூலை 2010 இல் விற்கப்பட்டது.
790 மில்லியனுக்கு காணி விற்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணி விற்பனை மூலம் பெறப்பட்ட பணத்தில் ரூ.595507721 மட்டுமே பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள ரூ.194800279 மோசடியாகப் பெறப்பட்டதாகவும் அந்தத் தொகை வேறு தேவைக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
நவம்பர் 2022 இல் முதன்மை சந்தேக நபர் மீது பயணத் தடை விதிக்கப்பட்டது. இந்த வருடம் பெப்ரவரி 27 ஆம் திகதி அவர் மீண்டும் இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டுநாயக்க பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் பெப்ரவரி 28 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை மார்ச் மாதம் 14ஆம் திகதி வரை மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 08 ஆம் திகதி பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது மே 17 2023 அன்று மீண்டும் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது செப்டம்பர் மாதம் 13 2023 வரை சந்தேக நபருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீதிமன்றம் மீண்டும் தற்காலிகமாக நீக்கியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM