உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' ஒடியோ வெளியீடு

Published By: Ponmalar

02 Jun, 2023 | 10:43 AM
image

நடிகரும், சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மாநில விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மாமன்னன்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு, சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மாமன்னன்'.

இதில் உதயநிதி ஸ்டாலின், 'வைகைப்புயல்' வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

சமூக நீதியை வலியுறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் முதல் பார்வை, இரண்டாம் பார்வை, முதல் பாடல், இரண்டாம் பாடல் ஆகியவை வெளியாகி பார்வையாளர்களின்... ரசிகர்களின்... திரையுலகினரின்... கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் சிறப்பு அதிதியாக பங்குபற்றினார். இவருடன் தமிழ் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களான சிவகார்த்திகேயன், விஜய் அண்டனி, சூரி, உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கு பற்றி சிறப்பித்தனர்.

படத்தைப் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், '' இந்தத் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கிறது. அவருடைய ஒவ்வொரு படத்திலும் பேசப்படும் சமூக நீதி இந்த படைப்பிலும் பேசப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பின் போது ஒவ்வொரு காட்சியிலும் பேசும் வசனங்கள்.. காட்சிப்படுத்து விதம்.. குறித்து அவரிடம் ஏராளமான விளக்கங்களை கேட்டு பெற்று நடித்திருக்கிறேன். அமைச்சர் பொறுப்பு ஏற்ற பிறகு மக்களுக்கான பணிகளை செய்வது அதிகரித்து விட்டதால், தற்காலிகமாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டிருக்கிறேன். மூன்றாண்டுகள் வரை இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை. அதன் பிறகு மக்கள் அளிக்கும் தீர்ப்பை பொறுத்து படங்களில் நடிப்பதை தீர்மானிப்பேன். இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு, மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறேன். இந்தத் திரைப்படம் சமூக நீதியை உரத்துப் பேசுகிறது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35