இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பொம்மை' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் திரையுலகில் கண்ணியமான படைப்புகளை வழங்கி, தனித்துவமான அடையாளத்துடன் வலம் வரும் இயக்குநரான ராதா மோகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பொம்மை'.
இதில் எஸ். ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இளைய இசைஞானி' யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை டாக்டர் வி. மருது பாண்டியன், டாக்டர் ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர் தீபா டி.துரை ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்த திரைப்படத்தை எஸ். ஜே .சூர்யா, ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பாக வழங்குகிறார்.
ராதா மோகன்- எஸ் ஜே சூர்யா ஆகியோரின் கூட்டணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், உணர்வுபூர்வமாகவும், நகைச்சுவையுடன் கூடிய படைப்பாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் இருக்கிறது. இவர்களின் எதிர்பார்ப்பு ஜூன் 16ஆம் திகதியன்று பூர்த்தியாகிறதா? இல்லையா? என தெரியவரும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM