'கடலோர கவிதைகள்' புகழ் நடிகை ரேகா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் 'மிரியம்மா' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார்.
இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார்.
பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு அக்கா, அண்ணி, அம்மா போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை ரேகா, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக அழுத்தமான அம்மா கதாபாத்திரத்தில் 'மிரியம்மா' படத்தில் நடிக்கிறார் இதனால் அவரது ரசிகர்கள் உற்சாமடைந்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM