ஜோகோவிச்சின் கொசோவா தொடர்பான கருத்து ஏற்படுத்திய சர்ச்சை

Published By: Sethu

02 Jun, 2023 | 01:22 PM
image

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றிவரும் சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச், கொசோவோ தொடர்பாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேர்பியாவுக்கும் அந்நாட்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு பிரிந்து சென்ற கோசோவோவுக்கும் இடையில் கடந்த சில தினங்களாக பதற்றங்கள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில், பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் முதல் சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டிய பின்னர், 'கொசோவோ ஆனது சேர்பியாவின் இதயம்' என வீடியோ  கெமரா ஒன்றின் மீது ஜோகோவிச் எழுதினார். கொசோவோ எமது நாட்டின் முக்கிய பகுதி. அதனால்தான் அப்படி எழுதினேன் என செய்தியாளர்களிடம் ஜோகோவிச் கூறினார்.  இவ்விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அரசியல் பதற்றத்தை ஜோகோவிச் தூண்டுகிறார் என கொசோவோ டென்னிஸ் சம்மேளனம் குற்றம்சுமத்தியுள்ளது.

ஆவர் ஒலிம்பிக் சானத்தை மீறியுள்ளார் என சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் கொசோவோ ஒலிம்பிக் குழு கூறியுள்ளது.

இந்த சர்ச்சையில் ஜோகோவிச் சம்பந்தப்படக் கூடாது என பிரான்ஸின் விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலீ கஸ்டேரா கூறியுள்ளார்.

எனினும், கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்த தடையில்லை என சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

36  வயதான நோவாக் ஜோகோவிச் தற்போது உலகின் 3 ஆவது நிலை வீரராக விளங்குகிறார். 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற அவர் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர்கள் பட்டியலில் ஸ்பெய்னின் ரபாயெல் நடாலுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருபதுக்கு - 20 இல் நேபாளம்...

2023-09-27 15:10:16
news-image

இளைஞர் விளையாட்டு விழா கடற்கரை கரப்பந்தாட்டடம்...

2023-09-27 10:24:38
news-image

லீக் பிரதிநிதிகள் கால்பந்தாட்ட மறுமலர்ச்சிக்காக மனச்சாட்சிக்கு...

2023-09-27 10:31:59
news-image

ஹசரங்க உபாதையிலிருந்து மீண்டால் மாற்று வீரராக...

2023-09-27 09:51:56
news-image

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023-09-26 11:18:45
news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59