(நெவில் அன்தனி)
பல வருடங்களாக முக்கிய கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னதாக சில சிறந்த ஆற்றல் மிக்க பந்துவீச்சாளர்களை இலங்கை வெளிக்கொண்டுவந்துள்ளதை அவதானிக்கலாம்.
லசித் மாலிங்காவைப் பொறுத்தமட்டில், அவர் 2004ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகி பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்தார்.
அஜந்தா மெண்டிஸை எடுத்துக்கொண்டால், அவர் ஆசியக் கிண்ணத்திற்கு சற்று முன்பு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் அஜன்த மெண்டிஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை ஆசிய சம்பியனாக்கியிருந்தார்.
அவர்களது வரிசையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (02) ஆரம்பமாகும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 20 வயதான மதீஷ பத்திரண அறிமுகமாகவுள்ளார்.
சர்வதேச அரங்கில் பத்திரண ஒரே ஒரு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றியுள்ளார்.
ஆனால், இண்டியன் பிறீமியர் லீக் 16ஆவது அத்தியாயத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் 5ஆவது சம்பியன் பட்டத்தை சுவீகரிப்பதற்கு மதீஷ பத்திரண பிரதான பங்காற்றியதன் காரணமாக திறமையான பந்துவீச்சாளராக பிரபல்யம் அடைந்துள்ளார்.
சென்னை சுப்பர் கிங்ஸின் நட்சத்திரமாக அவரை உயர்த்திய பெருமை அணித் தலைவர் எம். எஸ். தோனியை சாரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஒரு தனித்துவமான ரவுண்ட்-கை பந்துவீச்சுப் பாணியில் பத்திரண பந்துவீசுகிறார். லசித் மாலிங்கவின் பந்துவீச்சுப் பாணியை ஒத்ததாக பத்திரணவின் பந்துவீச்சப் பாணி இருப்பதால் அவர் 'குட்டி மாலிங்க' என செல்லமாக அழைக்கப்படுகிறார்.
ஸிம்பாப்வேயில் இம் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் மதீஷ பத்திரண எதிரணி துடப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்வார் என நம்பப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, அர்ஜுன ரணதுங்க தலைமையில் 1996இல் உலக சம்பியனான இலங்கை, அதன் பின்னர் இரண்டு தடவைகள் 2ஆம் இடத்தைப் பெற்றது. ஆனால் சர்வதேச ஒருநாள் கிரக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் சரிவு கண்டதால் இவ் வருடம் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM