(நெவில் அன்தனி)
இலங்கையில் பெற்ற கிரிக்கெட் அனுபவங்களுடனேயே மதீஷ பத்திரண இந்த நிலைக்கு முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கு விளையாடும்போது மதீஷ பெரிதாக வெளிச்சத்திற்கு வரவில்லை. ஆனால் ஐபிஎல்லில் விளையாடும் எந்த வீரராக இருந்தாலும் வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறார்.
அதற்கான வாய்ப்பும் தாராளமாக இருக்கிறது என இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை (01) கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மதீஷ பத்திரண பாடசாலை நாட்களில் 15 வயதுக்குட்பட்ட அணியிலிருந்து விளையாடி வந்ததுடன் கனிஷ்ட தேசிய மட்டத்தில் 17 வயதிலிருந்து விளையாடி வருகிறார்.
மதீஷ பத்திரணவின் அனுபவம் தொடர்பாக பேசுவதாக இருந்தால் அவர் 17க்குட்பட்ட வயதிலிருந்து கனிஷ்ட இலங்கை அணிக்காக விளையாடிவந்துள்ளார் என்பதை குறிப்பிட்டாகவேண்டும் என தசுன் ஷானக்க தெரிவித்தார்.
'ஐபிஎல் என்பது வழக்கத்திற்கு மாறான ஒரு புதுமையான, விறுவிறுப்பான விளையாட்டு. அப் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு விசேட இடம் வழங்கப்படுகிறது.
இலங்கைக்கு விளையாடும்போது மதீஷ பெரிதாக வெளிச்சத்திற்கு வரவில்லை. ஆனால் ஐபிஎல்லில் விளையாடும் எந்த வீரரானாலும் வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறார். அதற்கான சந்தர்பமும் அதிகமாக இருக்கிறது.
மதீஷ எப்போதும் இலங்கை அணியுடன் இருந்தார். நியூஸிலாந்து விஜயத்தின்போது அவருக்கு கொவிட் தோற்று ஏற்பட்டதாலேயே இருபது 20 தொடரில் விளையாடமுடியாமல் போனது. மதீஷ ஏற்கனவே இனங்காணப்பட்டிருந்தார் என நான் நினைக்கிறேன். அவரை 2 ஆம் திகதி இடம்பெறும் போட்டியில் கட்டாயம் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம்' என்றார் அவர்.
ஆப்கானிஸ்தானுடனான இந்தத் தொடர் உலக கிண்ண தகுதிகாண் சுற்றுக்கான பலப்பரீட்சையாக அமையுமா என அவரிடம் கேட்டபோது,
'நிச்சயமாக. ஆப்கானிஸ்துடனான இந்தத் தொடரை உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றை இலக்காகக் கொண்டு விளையாடவுள்ளோம். இதனை முன்னிட்டு தொடரின்போது இரண்டு மூன்று கூட்டுகளை (Combinations) பரீட்சிக்க எண்ணியுள்ளோம். ஹம்பாந்தோட்டையில் நாளைய போட்டிக்கான ஆடுகளத்தில் நீண்ட நாட்களாக நாங்கள் விளையாடவில்லை. இது புதிய ஆடுகளம். எனவே வேகப்பந்துவீச்சாளர்கள் மூவரைப் பயன்டுத்துவோம் என நினைக்கிறேன்.
'இந்த ஆடுகளத்தில் சர்வதேச போட்டிகள் விளையாடப்படாதபோதிலும் நாங்கள் எல்பிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளோம். மேலும் அனுபவசாலிகள் சிறப்பாக விளையாடுவார்கள் என நான் நம்புகிறேன்.
'எமது அணி கணிசமான மொத்த எண்ணிக்கையை பெறவேண்டுமானல் அனுபசாலிகளான ஏஞ்சியும் (ஏஞ்சலோ மெத்யூஸ்), திமுத்தும் (திமுத் கருணாரட்ன) அணியில் இடம்பெறவேண்டும். அவர்களது ஒத்துழைப்பு நிறைய தேவைப்படுகிறது. டெஸ்ட் அணித் தலைவரான திமுத் பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வந்துள்ளார். ஏஞ்சலோ மெத்யூஸும் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாடும் திறமையுள்ளவர். கடந்த காலத்தில் இளம் வீரர்கள் மீது அதிக கவனம் செலுத்தியதாலேயே அவர்கள் இருவரையும் இணைத்துக்கொள்ள முடியாமல் போனது. அவர்கள் இருவரது பிரசன்னம் எமது அணியை மேலும் பலப்படுத்தும் என கருதுகிறேன்' என்றும் அவர் கூறினார்.
வனிந்து உபாதையுற்றிருப்பதால் துஷான் ஹேமன்த குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார். முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர் மேலும் கூறினார்.
ராஷித் கான் அணியில் இல்லாதது இலங்கை அணிக்கு சாதகமாக அமையுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தசுன் ஷானக்க, 'ராஷித் கான் இல்லாதது எமக்கு சாதகமாக அமையும் என கருதமாட்டேன். ஆப்கன் அணியில் நூர் அஹமத் இருக்கிறார். அவர் இலங்கையில் விளையாடிய அனுபசாலி ஆவார். அத்துடன் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருடன் முஜீப், நபி ஆகியோரும் அணியில் இடம்பெறுகின்றனர். ஆப்கானிஸ்தான் அணியில் அனுபவம்வாய்ந்த சுழல்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுகின்றனர். எனவே அந்த அணியை இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடாது என நான் கருதுகிறேன். போட்டியில் யார் யார் விளையாடுகிறோர்களோ அவர்களை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடனேயே விளையாடுவோம்' என பதிலளித்தார்.
இலங்கை அணி (பெரும்பாலும்) திமுத் கருணாரட்ன, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் (உதவித் தலைவர்), ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), துஷான் ஹேமன்த, சாமிக்க கருணாரட்ன, மதீஷ பத்திரண, துஷ்மன்த சமீர அல்லது கசுன் ராஜித்த அல்லது லஹிரு குமார, மஹீஷ் தீக்ஷன.
இலங்கை குழாத்தில் சதீர சமரவிக்ரம, வனிந்து ஹசரங்க டி சில்வா
ஆப்கானிஸ்தான் குழாம்: ஹஷ்மத்துல்லா ஷஹிதி (அணித் தலைவர்), ராஹ்மத் ஷா (உதவித் தலைவர்), அப்துல் ரஹ்மான், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், பரீத் அஹ்மத், பஸால்ஹக் பாறூக்கி, இப்ராஹிம் ஸத்ரான், இக்ரம் அலிகில், மொஹமத் நபி, முஜீப் உர் ரஹ்மான், நஜிபுல்லா ஸத்ரான், நூர் அஹ்மத், ரஹ்மானுல்லா குர்பாஸ், ராஷித் கான், ரியாஸ் ஹசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM