அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஜோபைடன் நிலத்தில் வீழ்ந்த சம்பவம் ஊடகங்களில் கவனத்தை பெற்றுள்ளது.
அமெரிக்க விமானப்படை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தவேளை ஜோ பைடன் கால்தடுக்கி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதிகளில் வயது கூடியவரான( 80) பைடனை அங்கிருந்தவர்கள் தூக்கிவிட்டனர் அவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை.
பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 921பேருடனும் கைகுலுக்குவதற்காக ஒரு மணித்தியலாத்திற்கு ஜனாதிபதி நின்றபடி காணப்பட்டார்.
ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என வெள்ளை மாளிகையின் தொடர்பாடல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அவர் பட்டப்படிப்பை பூர்த்திசெய்தவர்களுடன் கைகுலுக்கிக்கொண்டிருந்த பகுதியில் மணல்மூடையொன்று காணப்பட்டது என ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
மேடைக்கு செல்லும்போது பைடன் மணல்மூடையில் தடுக்கி விழுந்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நிலத்தில் விழுந்த பைடனை விமானப்படை அதிகாரிகளும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தூக்கிவிடும் வேளை ஜனாதிபதி மணல்மூடையை நோக்கி கைகளை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.
தனது விமானத்திற்கு திரும்பியவேளை ஜனாதிபதி கேள்விகளிற்கு பதில் அளிக்கவில்லை என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நல்லநிலையில் காணப்படுகின்றார் அவர் உற்சாகாமான சிரிப்புடன் விமானத்தில் ஏறினார் என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஜோபைடன் மீண்டும ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு வயதாகிவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அவரது வயது குறித்து பெருமளவு வாக்காளர்கள் கரிசனை கொண்டிருப்பதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
முன்னர் பைடன் சைக்கிளில் இருந்து விழுந்ததும் இந்த சம்பவமும் அவரின் வயது குறித்த கரிசனைகளை அதிகரிக்கலாம் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM