இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான 75 வருட இராஜதந்திர உறவு பூர்த்தியை முன்னிட்டு 2023 பிரெஞ்சு வசந்த கால நிகழ்வுகள் கொண்டாடப்படவுள்ளது.
இந்நிகழ்வுகள் இருநாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பினை கலையம்சங்களினூடாகவும், இரு நாடுகளின் கலாசார பல்வைகத்தன்மைகளுக்கும் ஏற்ப கொண்டாடப்படவுள்ளது.
இது தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை (1) கொழும்பில் நடைபெற்றது.
இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான 75 வருட இராஜதந்திர உறவினை பூர்த்தி செய்கின்ற தருணத்திலேயே 2023 பிரெஞ்சு வசந்த கால நிகழ்வுகளும் கொண்டாடப்படுகின்றன.
இந்நிகழ்வுகள் இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பினை கலையம்சங்களினூடாகவும், இரு நாடுகளின் கலாசார பல்வைகத்தன்மைகளுக்கும் ஏற்ப கொண்டாடப்படவுள்ளது.
இலங்கையின் மாபெரும் கலாசார விழாக்களிலொன்றான பிரெஞ் வசந்த கால கொண்டாட்டம் மீண்டும் இவ் வருடம் ஜூன் மாதம் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி வரை கொண்டாடப்படவுள்ளது.
16 ஆவது பதிப்பதாகவும், 2019 ஆம் ஆண்டு முதல் முழு அளவிலான தோற்றங்களுடன் இவ் வருடமும் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான பிரெஞ்சு தூதரகமும், அலியோன்ஸ் பிரொண்சஸ் கலாசார நிலையம் வலையமைப்பும் இணைந்து நடத்துகின்றன.
இந்நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி நண்பகல் பிரெஞ்சு கலாசார நிலையத்திலும், மாலை இலங்கை மன்றக் கல்லூரியில் பிரெஞ்சு மற்றும் இலங்கை இசை நிகழ்வுகள் அரங்கேறும்.
மேலும், ஜூலை மாதம் 5 ஆம் திகதி புகைப்படக் கண்காட்சி மற்றும் புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களின் புகைப்படக் கண்காட்சி அலியோன்ஸ் ப்ரொண்சஸ் நிலையத்தில் நடைபெறும். அதேவேளை, இக்கண்காட்சி கண்டி மற்றும் மாத்தறை கலாசார நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்படும்.
மேலும், ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையில் திகில், ஆவண மற்றும் அனிமேஷன் படங்களை உள்ளடக்கிய 6 பிரெஞ்சு திரைப்படங்கள் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் திரையிடப்படுகிறது.
இந்நிலையில் பிரெஞ்சு வசந்த கால கொண்டாட்டங்கள் நடைபெறும் இந்த மாதங்களில் கலை, இசை மற்றும் சினிமா போன்ற கலைக்கதம்ப நிகழ்வுகளை கண்டுகளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM