நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நாணய நிதியத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

Published By: Vishnu

01 Jun, 2023 | 09:33 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, வருமான வரி அதிகரிப்பினால் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒக்கமுரா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் புதன்கிழமை (31) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழுவினரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மேலெழுந்து வரும் பொருளாதார நிலை குறித்து விரிவாக விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர், வீழ்ச்சியடைந்துள்ள பல்வேறு துறைகள் தொடர்பிலும் பிரதிநிதிகள் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இலங்கை இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நிலையில் இருந்து மீள்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முறையான நிதி முகாமைத்துவத்துக்கு அரசாங்கத்துக்குத் தேவையான செல்வாக்கை பிரயோகிக்குமாறும் , வருமான வரி அதிகரிப்பு காரணமாக நாட்டு மக்கள் தாங்க முடியாத அழுத்தத்திலும் கஷ்டத்திலும் வாழ்ந்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.

வீழ்ச்சியடைந்துள்ள துறைகள் குறித்து ஒவ்வொன்றாக விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நிலையில் இருந்து இலங்கை மீள்வதற்கு கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்தார்.

இலங்கைப் பொருளாதாரத் திட்டத்தின் அண்மைய முன்னேற்றப் போக்குகள், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், தடைகள் மற்றும் நிலவி வரும் தாமதங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06