23 வயதுக்குட்பட்ட பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இலங்கை தேசிய பளுதூக்குதல் அணி அறிவிப்பு - விளையாட்டுத் துறை அமைச்சர்

Published By: Digital Desk 5

01 Jun, 2023 | 05:19 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இந்தியாவின் புது டெல்லியில் எதிர்வரும்  ஜூலை மாதம்  13ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சிரேஷ்ட, இளையோர், 23 வயதுக்குட்பட்ட   பொதுநலவாய   பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இலங்கை தேசிய பளுதூக்குதல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்த ஆவணங்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய பளுதூக்கல் அணியில் 13 வீரர்களும் 11 வீராங்கனைகளும் அங்கம் வகிக்கின்றனர்.

திலங்க இசுரு குமார, எஸ்.டி.சோமதிலக்க, எஸ்.டி. ஜயவர்தன ஆகிய மூவரும் 55 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் பங்கேற்பதுடன், கே.டி எகொடவத்த, ஏ.எஸ்.லியனகெதர  ஆகிய இருவரும் 61 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் பங்கேற்கின்றனர்.  

67 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் எஸ். எம்.எம்.ஜயதிலக, ஏ.யு.எம்.எம். விஜேசிங்க ஆகியோர் விளையாடவுள்ளதுடன்,  இந்திக்க சதுரங்க திஸாநாயக்க 73 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவிலும், சிந்தன கீதால் விதானகே 89 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவிலும் பங்கேற்கின்றனர்.

இவர்களைத் தவிர, எஸ்.எம். திஸாநாயக்க, எஸ்.எம். பீட்டர்ஸ், ஏ.ஜி.எஸ். அபேவிக்ரம ஆகியோர் முறையே 96 கிலோ கிராம், 102 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவுகளிலும்  டபிள்யூ.பி.டி. ஜயவிக்ரம 109 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவிலும் விளையாடவுள்ளனர். 

இதேவேளை, பெண்கள் சார்பில் டி.எம்.எஸ். சமரக்கோன், எம்.டி.எம். பிரேமரத்ன  இருவரும் 45 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவிலும், பி.ஜி.டி. ஹன்சனி, டபிள்யூ.சி.எம். வர்ணகுலசூரிய, எம். உமேரா ஆகியோர் மு‍றையே 49, 55, 59  கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவுகளிலும் ஜி.டி. குருகம,   டபிள்யூ.பி.டி.என். சஞ்சனா , பி.சி. பிரியந்தி, ஏ.எஸ். விக்கிரமாதித்த ஆகியோர் முறையே 71, 76 ,81, 87, எடைக்குட்பட்ட பிரிவுகளிலும்,பி.ஜே. ஹபுதென்ன மற்றும் ஜே. சகுன்யா இருவரும் 87 கிலோ கிராம் எடைக்கு மேற்பட்ட பிரிவுகளிலும் விளையாடவுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55