'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

Published By: Ponmalar

01 Jun, 2023 | 05:02 PM
image

பேபி மோனிகா சிவா மற்றும் மாஸ்டர் சக்தி ரித்விக் என இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எறும்பு' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'சிக்கு புக்கு சிக்கு..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'எறும்பு'.

இதில் நடிகர்கள் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜோர்ஜ் மரியான், நடிகைகள் சூசன் ஜோர்ஜ், பரவை சுந்தராம்பாள், குழந்தை நட்சத்திரங்கள் மோனிகா சிவா மற்றும் சக்தி ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்திருக்கிறார்.

கிராமப்புறத்தில் விளிம்பு நிலை மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ட்ரூ ஜி வி எஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் இம்மாதம் 16ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'சிக்கு புக்கு சிக்கு..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் ஜி சுரேஷ் மற்றும் அருண்ராஜ் எழுத, புதுமுக பின்னணி பாடகியான மேக்னா சுமேஷ் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் குழந்தைகளுக்கான பாடலாகவும், தாள லயம் மாறாத பிள்ளைகளுக்கு பிடித்த பாடலாகவும் இருப்பதால் பாரிய வெற்றியை பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின்...

2023-09-27 14:40:50
news-image

தன் பாலின சேர்க்கையாளர்களின் காதலை உரக்கப்...

2023-09-27 14:41:11
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட இசை...

2023-09-27 14:43:36
news-image

சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் 'எனக்கு...

2023-09-26 17:25:37
news-image

மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டிய சித்தார்த்தின் 'சித்தா'

2023-09-26 15:57:08
news-image

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும்...

2023-09-26 17:23:44
news-image

இரட்டைச் சாதனை படைத்திருக்கும் ஒரே இந்திய...

2023-09-26 14:51:25
news-image

வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

2023-09-25 13:12:03
news-image

அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' பட...

2023-09-25 13:11:28
news-image

ஒக்டோபரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' பட...

2023-09-25 11:46:27
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட அப்டேட்

2023-09-23 16:21:24
news-image

திரிஷா நடிக்கும் 'தி ரோடு' படத்தின்...

2023-09-22 16:11:42