முல்லைத்தீவு புளியங்குளம் பிரதான வீதியில் கோடாலிக்கல்லு பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ........

முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று நெடுங்கேணி பிரதேசத்துக்கு அண்மையாகவுள்ள கோடாலிக்கல்லு பிரதேசத்திலுள்ள வளைவு ஒன்றில் வைத்து வேககட்டுப்ப்பாட்டையிழந்து அருகிலிருந்த பனைமரம் ஒன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இதில் பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் நால்வர் படுகாயமடைந்ததோடு பஸ்ஸின் ஒருபகுதி முற்றாக சிதைவடைந்துள்ளது.

விபத்துத்தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.