(எம்.மனோசித்ரா)
நாட்டில் வருடத்துக்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுகின்றவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் தம்மை தேசிய வருமான திணைக்களத்தில் பதிவு செய்வது வியாழக்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள வைத்தியர்கள், இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் , முகாமைத்துவ கணக்காய்வு நிர்வாக உறுப்பினர்கள், இலங்கை பொறியியல் நிறுவன உறுப்பினர்கள், இலங்கை அளவீட்டு மற்றும் மதிப்பாய்வு நிறுவன உறுப்பினர்கள், உயர் நீதிமன்ற சட்டத்தரணிகள், பிரதேச செயலகங்களில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் , மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்துள்ளவர்கள் (முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரங்கள் தவிர) தம்மை வருமான திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அசையா சொத்துக்களை கொள்வனவு செய்துள்ள அல்லது உரித்தாக்கிக் கொள்வதற்கான உரிமத்தை பரிமாற்றிக் கொண்டவர்கள் , இலங்கையில் மாதாந்தம் ஒரு இலட்சம் அல்லது வருடத்துக்கு 12 இலட்சம் வருமானம் பெறுபவர்களும் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதே போன்று இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 18 வயதை பூர்த்தி செய்துள்ள அல்லது 2024 ஜனவரி முதலாம் திகதி அல்லது அதன் பின்னர் 18 வயதாகவுள்ள அனைவரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM