(இராஜதுரை ஹஷான்)
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கடன் பெறுவதை தவிர வேறு எந்த திட்டமும் ஜனாதிபதியிடம் கிடையாது. அதிக கடன் சுமையால் தான் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது.
கடன் மறுசீரமைப்பு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வரை தற்காலிக தீர்வினை மாத்திரம் வழங்கும் என சுதந்திர மக்கள் சபையின் பாராளுமன்ற பிரதிநிதி குணபால ரத்னசேகர தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அதிக கடன்சுமையினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. கடன் பெற்று பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார். பொருளாதார பாதிப்புக்கு கடன் பிரதான காரணியாக காணப்படும் நிலையில் கடன் பெற்று எவ்வாறு பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வது.
கடன்களை மறுசீரமைப்பதை தவிர்த்து அரசாங்கத்திடம் மாற்றுத்திட்டம் ஏதும் கிடையாது. கடன் பெறல்,மறுசீரமைத்தல் ஆகிய தீர்மானங்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வரை சாத்தியமாக அமையும்.கடன் மறுசீரமைக்கப்பட்டதன் பின்னர் வட்டியுடன் கடன்களை மீள செலுத்த வேண்டும்.
தேசிய கடன்களை மறுசீரமைப்பதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.வங்கி கட்டமைப்பில் பாதிப்பில் ஏற்படும் பாதிப்பின் உண்மை தன்மையை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவு திட்டங்களை வெளிப்படை தன்மையுடன் விரிவுப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்கள்.ஆனால் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுகிறதா என்பது கேள்விக்குறியான நிலையில் காணப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிபபிட்டுக் கொண்டு நடுத்தர மக்களை நெருக்குள்ளாக்கும் செயற்பாடுகளை மாத்திரம் அரசாங்கம் முன்னெடுக்கிறது.
அரசாங்கத்தின் தீர்மானங்களினால் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மாத்திரமே பயனடைந்துள்ளார்கள்.நாட்டு மக்கள் இன்றும் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீளவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM