வீழ்ச்சியடையும் சுகாதார துறையுடன் போராடும் பொதுமக்கள்

Published By: Rajeeban

01 Jun, 2023 | 03:31 PM
image

அரசாங்கமருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளிடம் வெளியில் தனியாரிடமிருந்து  சிலவகை மருந்துகளை கொள்வனவு செய்யுமாறும்  சிலவகை பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதால் அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தேசிய வைத்தியசாலைக்கு வந்த பலரிடம் உரையாடியவேளை அரசாங்க மருத்துவமனைகளில் நிலவும் மருந்துதட்டுப்பாட்டினால் வறியவர்கள் சுமக்கும்சுமை குறித்து தெரியவந்தது,மருத்துவமனைகள் அவர்கள் வெளியே மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு அழுத்தம்கொடுப்பதால் இந்த நிலை காணப்படுகின்றது.

இது அவர்கள் மேலதிக பணத்தை செலவிடவேண்டிய இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது.

முகமட் என்ற நோயாளி யாழ்ப்பாணத்திலிருந்து நீரிழிவு நோய்க்கான மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக வந்திருந்தார்.எனினும் தேசிய வைத்தியசாலையில் அந்த மருந்துகள் இல்லாததால் அவற்றை வெளியே கொள்வனவு செய்யுமாறு கேட்டிருந்தனர்.

தனது மகனின் காயங்கள் இரண்டிற்காக  அவரை வெளியே கொண்டு சென்று இரண்டு பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் அதற்கு 1950 ரூபாய் செலவானதாகவும் சொய்ச ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இல்லாததால் வெளியில் மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு தன்னை கேட்டுக்கொண்டனர் என தெரிவித்தார் மஹரகம பகுதியை சேர்ந்த நில்மினி குமாரி இதுநேரம்பிடிக்கும் வேலை மேலும் பணமும் செலவாகின்றது இது அநீதி என அவர் தெரிவித்தார்.

மருத்துவர் தெரிவித்த மருந்தினை வெளியே வாங்குவதற்கு தேவையான பணத்தினை யாரிடமாவது வாங்கவேண்டும் என தெரிவித்தார் 70 வயது குமாரசிங்க என்னிடம்தற்போது பணம் இல்லை வீட்டுக்கு செல்லவேண்டும் ஏழைகள் என்பதால் துன்பத்தை அனுபவிக்கவேண்டியுள்ளது என குறிப்பிட்டார்

இதேவேளை அரசமருந்தாளர்கள்  சங்கத்தின் தலைவர் துசாரரணதேவ அரசாங்கமருத்துவமனைகளில் கடும் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கைமருத்துவ சங்கத்தின் தலைவர் வினன்யா ஆரியரட்ண அரசமருத்துவமனைகளில்மருந்துகளிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என தெரிவித்தார்.

daily mirror

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48
news-image

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்...

2023-09-25 11:43:22
news-image

பசும்பால் விற்க இடையூறு : மதுபானசாலைகளுக்கு...

2023-09-25 11:02:40
news-image

மறுக்க முடி­யாத உரிமை

2023-09-24 19:45:52
news-image

ஜனா­தி­ப­தியின் அதிகப் பிர­சங்­கித்­தனம்

2023-09-24 19:46:10
news-image

தனி வழி செல்­வ­தற்கு கள­ம­மைக்கும் பஷில்

2023-09-24 19:46:51
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒத்துழைப்பை வலியுறுத்தும் ஆசிய...

2023-09-24 19:47:49
news-image

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் பண ...

2023-09-24 19:48:27
news-image

வளர்ந்து வரும் ஆப்பிரிக்க சக்திகளின் எழுச்சி

2023-09-24 19:53:55
news-image

ஒஸ்லோ உடன்படிக்கையும் மரணித்துவிட்டது

2023-09-24 19:54:17
news-image

இந்­திய - கனே­டிய இரா­ஜ­தந்­திர முறுகல்...

2023-09-24 15:36:36