பணவீக்கம், உணவுப் பணவீக்கம் என்பவற்றில் 10 வீதம் வீழ்ச்சி - மத்திய வங்கி அறிவிப்பு

Published By: Digital Desk 3

01 Jun, 2023 | 09:31 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 25.2 சதவீதமாகவும், உணவுப்பணவீக்கம் 21.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

ஏப்ரலில் பணவீக்கமானது 35.3 சதவீதமாகவும், உணவுப்பணவீக்கம் 30.6 சதவீதமாகவும் காணப்பட்ட நிலையிலேயே மே மாதத்தில் சாதகமான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

முதன்மைப் பணவீக்கத்தின் இவ்வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 ஏப்ரலில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதைக்கு அமைவாகக் காணப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உணவுப் பணவீக்கமானது ஏப்ரலில் 30.6 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 21.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் ஏப்பிரலில் 37.6 சதவீதத்திலிருந்து 27 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம் மே மாதத்தில் - 0.02 சதவீதத்தைப் பதிவுசெய்துள்ளது. இச்சிறிய மாதாந்த மாற்றத்திற்கு 0.53 சதவீதமாகவிருந்த உணவு வகையில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் மூலம் - 0.56 சதவீதமாகவிருந்த உணவல்லா வகையிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை வீழ்ச்சிகளின் எதிரீடு காரணமாக அமைந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் ஏப்ரலில் 27.8 சதவீதத்திலிருந்து மே மாதம் 20.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதற்கமைய பணவீக்கத்தின் வீழ்ச்சிப் போக்கானது முன்கூட்டியே ஊகிக்கப்பட்டதைவிட விரைவாக இவ்வாண்டின்  3 ஆம் காலாண்டில் ஒற்றை இலக்க மட்டங்களை நோக்கி பணவீக்கத்தினை தொடர்ந்தும் குறைவடையச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இறுக்கமான நாணய மற்றும் இறைக் கொள்கைகளின் காலங்கடந்த தாக்கம், இலங்கை ரூபாய் வலுவடைதல், எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளில் குறைவு, உணவு விலைகள் இயல்பு நிலைக்குத் திரும்புதல் அத்துடன்  சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கத்தின் விளைவு என்பன மூலம் பணவீக்கம் வீழ்ச்சிப் போக்கில் செல்வதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35