வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று சிக்கித் தவிக்கும்  பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மன்னாரில் போராட்டம்

Published By: Vishnu

01 Jun, 2023 | 02:32 PM
image

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (1) காலை 10 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஓமான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையில் இருந்து வேலை வாய்ப்புக்காக சென்று நாடு திரும்ப முடியாத நிலையில் சிக்கி தவிக்கும் பெண் தொழிலாளர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு திருப்பி கொண்டு வாருமாறும்,அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மன்னாரில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனம் எழுதிய  பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பலவிதமான சித்திரவதைகளை அனுபவித்த இலங்கைப் பெண்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் மகஜரும் வெளியிட்டனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய...

2025-03-24 15:44:19
news-image

மேர்வின் சில்வா உட்பட மூவரின் விளக்கமறியல்...

2025-03-24 15:45:50
news-image

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன...

2025-03-24 15:41:21
news-image

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ...

2025-03-24 15:10:30
news-image

3 புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் நற்சான்றிதழ்...

2025-03-24 15:09:32
news-image

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன்...

2025-03-24 14:52:35
news-image

யாழ். மாநகர வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக...

2025-03-24 14:46:15
news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36