(எம்.மனோசித்ரா)
இலங்கை மத்திய வங்கி அதன் நிதிக் கொள்கையில் தளர்வுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அதற்கமைய நிலையான வைப்புக்களுக்கான வட்டியை 13 சதவீதமாகவும், நிலையான கடனுக்கான வட்டியை 14 சதவீதமாகவும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (31) மத்திய வங்கி நிதி சபையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பணவீக்கம் குறையும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளதுடன், நாட்டின் பணவீக்கம் கணித்த காலத்தை விட விரைவில் ஒற்றை இலக்கத்தை எட்டும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மே மாத இறுதிக்குள், இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியன் டொலரை விட அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், சீனாவினால் வழங்கப்பட்ட அந்நியச் செலாவணி கடன் வசதியும் இதில் உள்ளடங்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே பணவீக்கம் எதிர்பார்த்ததை விட வேகமாக வீழ்ச்சியடைதல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிதிக் கொள்கைகளை தளர்த்தும் நோக்கில்மத்திய வங்கி இந்த தீரு;மானத்தை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM