அவுஸ்திரேலியாவின் மிகவும் கௌரவிக்கப்பட்ட இராணுவவீரர் ஆப்கானில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டார் - நீதிமன்றம் தீர்ப்பு - அவதூறு வழக்கும் தள்ளுபடி

Published By: Rajeeban

01 Jun, 2023 | 01:12 PM
image

அவுஸ்திரேலியாவின் மிகவும் கௌரவிக்கப்பட்ட  இராணுவீரரான பென்ரொபேர்ட்ஸ் ஸ்மித் ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றம் இழைத்தார் என குற்றம்சாட்டிய மூன்று செய்திதாள்களுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் மூன்று செய்தித்தாள்கள் பென்ரொபேட்ஸ் ஸ்மித் ஆயுதமேந்தாத சிறைக்கைதிகளை கொலை செய்தது உட்பட யுத்தகுற்றங்களில் ஈடுபட்டார் என செய்திவெளியிட்டிருந்தன.

பென்ரொபேட்ஸ் ஸ்மித் செய்தித்தாள்களிற்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய  இராணுவீரருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை முதல்தடவையாக அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஆராய்ந்துள்ளது.

இன்றைய தீர்;ப்பின்மூலம் நீதிமன்றம் நீண்டகால விசாரணைகளை முடிவிற்கு வந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய இராணுவத்திற்கு பெயருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தீர்ப்பையும் வெளியிட்டுள்ளது.

பென்ரொபேட்ஸ் ஸ்மித் குறித்து ஏஜ் சிட்னிமோர்னிங்ஹெரால்ட் கான்பெரா டைம்ஸ் ஆகியன வெளியிட்ட செய்தியி;ல் குறிப்பிடத்தக்க உண்மை உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால் அனைத்தும் உண்மையில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.சிலசந்தர்ப்பங்களில் பத்திரிகைகள் சூழ்நிலை உண்மையை கண்டறிந்தன ,சில சந்தர்ப்பங்களில் உண்மையை நிறுவவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் விசேடபடையணியை சேர்ந்த ரொபேட்ஸ் ஸ்மித் ஆப்கானில் அப்பாவி பொதுமகன் ஒருவரை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்ட பின்னர்  தனது படையணியை சேர்ந்தவர்களை அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் என பத்திரிகைகள் தெரிவித்திருப்பது உண்மை என நீதிபதி தெரிவித்துள்ளார்.

செயற்கைகால் பொருத்தப்பட்ட நபர் ஒருவரைசுட்டுக்கொன்ற பின்னர் செயற்கை காலை அவுஸ்திரேலியாவிற்கு கொண்டுவந்து அதனை மதுஅருந்துவதற்கு பயன்படுத்துமாறு தனது படையினரை ரொபேட்ஸ் ஸ்மித் கேட்டுக்கொண்டார் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

வீரத்திற்கான அவுஸ்திரேலியாவின் உயர் விருதான விக்டோரியா குரொஸ் வழங்கப்பட்ட ரொபேட்ஸ் ஸ்மித்தின்  ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த கௌரவத்திற்கு நீதிமன்ற தீர்ப்புகள் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஏஜ் சிட்னிமோர்னிங் ஹெரால்ட் கான்பெரா டைம்ஸ் ஆகியன 2018 இல் ஸ்மித் கொலைகாரர் தனது கௌரவத்தை பாதுகாப்பதற்காக பொய்சொன்னார் என்பதை நிரூபிக்கும் விதத்தில்  கட்டுரைகளை வெளியிட்டிருந்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04