(இராஜதுரை ஹஷான்)
தேசிய அரசாங்கத்தை அமைக்க சகல எதிர்க்கட்சிகளும் இணக்கம் தெரிவித்தால் அது தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்துவார்.அமைச்சு பதவிகளை இலக்காக கொண்டு அரசாங்கத்தில் இணையும் தரப்பினருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கம்பஹா பகுதியில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகல அரசியல் கட்சிகளுக்கும் பலமுறை அழைப்பு விடுத்தார். ஆசை ஆனால் பயம் என்ற காரணத்தால் அரசாங்கத்துடன் இணையவில்லை.பாரிய போராட்டத்தில் இருந்து நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
தேசிய அரசாங்கத்தை அமைக்க பலமுறை அழைப்பு விடுத்தும் எதிர்க்கட்சிகள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.தற்போதைய நிலையில் தேசிய அரசாங்கத்தை அமைக்க சகல எதிர்க்கட்சிகளும் இணக்கம் தெரிவித்தால் அது தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்துவார்.
அமைச்சு பதவிகளை இலக்காக கொண்டு அரசாங்கத்தில் இணையும் தரப்பினருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படமாட்டாது என்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.அமைச்சரவையை விரிவுப்படுத்தும் நோக்கம் தற்போது கிடையாது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.அமைச்சு பதவிகள் இல்லாத காரணத்தால்; ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எவரும் எதிர்க்கட்சி பக்கம் செல்லமாட்டார்கள் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM