'அருவம்' என்ற படத்திற்குப் பிறகு நடிகர் சித்தார்த் நடிப்பில் தயாராகி, இம்மாதம் ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டக்கர்'. மூன்றாண்டுகளுக்குப் பிறகு நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'டக்கர்' திரைப்படம் எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் படத்தைப் பற்றி சித்தார்த் பேசுகையில், “டக்கர் என்ற தலைப்பிற்கு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பொருள் இருக்கிறது. வட இந்தியாவில் டக்கர் என்றால், 'சரியான போட்டி' என பொருள். வேறு சில இடங்களில் டக்கர் என்றால் 'பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக இருக்கிறார்' எனப் பொருள். சில இடங்களில் டக்கர் என்றால் 'மோதல்' என பொருள். சில இடங்களில் டக்கர் என்றால் 'சூப்பர்' எனப் பொருள். இந்தத் திரைப்படத்தில் டக்கர் என்றால் மோதலை குறிப்பிடுகிறது.
இந்தப் படத்தில் குன்ஸ் எனும் பெயருள்ள நாயகனுக்கும், ஒரு பெண்ணிற்கும் மோதல் ஏற்படுகிறது. ஒரு பயங்கரமான கோபக்கார இளைஞனின் கதை தான் டக்கர். அந்தக் கோபத்தின் பின்னணி எளிமையானது. அனைவரையும் போலவே அந்த இளைஞனும் பணக்காரனாக வேண்டும் என ஆசைப்படுகிறான். ஆனால் அது நடைபெறவில்லை. அதனால் கோபம் ஏற்படுகிறது. யார் மீது கோபம்... எதன் மீது கோபம்... அதனை எப்படி வெளிப்படுத்துவது... என தெரியாமல் தவிக்கிறார். இப்படி பயணிக்கும் அவனுடைய வாழ்வில் ஏற்படும் ஏற்றங்களும், தாழ்வுகளும், திருப்பங்களும் தான் இப்படத்தின் பரபரப்புடன் கூடிய அதிவேக திரைக்கதை.
இந்தத் திரைப்படத்தில் ஐந்து சண்டைக் காட்சிகள் இருக்கிறது. ஐந்தும் அனல் பறக்கும் சண்டை காட்சிகள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான என்னுடைய திரை பயணத்தில் சண்டைக் காட்சிகளுக்காக அதிக கால்ஷீட் கொடுத்து நடித்த திரைப்படம் இந்த டக்கர். அதனால் இந்த படத்தின் மீது எனக்கு கூடுதல் நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM