உலக அளவில் கொரோனா பாதிப்பிற்கு பின்னரான பக்க விளைவுகள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையினதாக இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது என சுகாதாரத் துறை வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாக எம்மில் பலரும் தங்களது நுரையீரல் ஆரோக்கியம் குறித்த முழுமையான விழிப்புணர்வை பெற வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
புகை பிடிப்பவர்களும், புகைப்பிடிப்பவர்களாலும் மக்களின் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஏராளமான நோயாளிகள், மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று வருகிறார்கள். அதிலும் மருத்துவர்கள் லங் ரிஹபிலிடேஷன் எனப்படும் நுரையீரல் புனர்வாழ்வு அல்லது நுரையீரல் மீள் ஆரோக்கியம் குறித்த பரிசோதனை சிகிச்சை என்றும், ஒரு வகையினதான சிகிச்சையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த சிகிச்சையின் பிரதான நோக்கம், நுரையீரல் ஆரோக்கியமாக இயங்க வேண்டும். அதன் செயல் திறன் முழுமையாக இயக்கப்பட வேண்டும் என்பதே. சுற்றுச்சூழல் மாசு, சிகரட் புகை போன்ற பல்வேறு காரணங்களால் நுரையீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு முதலில் அவர்களின் நுரையீரலில் செயல் திறன் குறித்த பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். இதனைத் தொடர்ந்து மூன்று மாத கால சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.
இந்த சிகிச்சையில் நுரையீரல் இயங்குவதற்கு தேவையான அதனருகில் உள்ள தசைகளின் வலிமையை மேம்படுத்துவதற்கான உடற்பயிற்சிகள், நுரையீரலில் ஆரோக்கியத்திற்கான பிரத்யேக உணவு முறைகள், பாதிக்கப்பட்டிருக்கும் நுரையீரல் மற்றும் எதிர்காலத்தில் நுரையீரல் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான சிகிச்சைகள் என இந்த சிகிச்சை முறை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நோயாளிகள் வாரத்திற்கு மூன்று முறை மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் அறிவுறுத்தும் உடற்பயிற்சி, உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டால் நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
டொக்டர் தீபா செல்வி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM