கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எழுதிய ‘பூஞ்செண்டு’ கவிதை நூல் வெளியீட்டுக்கான இலக்கிய ஒன்றுகூடல் எதிர்வரும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.45 க்கு கொழும்பு 8, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
அல் ஹிதாயா தேசிய கல்லூரியின் முன்னாள் அதிபர் தேசமான்ய, ஹாஜியானி நாகூர் உம்மா காதர் தலைமையில் நடைபெறும் இந்த வெளியீட்டு நிகழ்வில் நூலின் முதல் பிரதியை 'தேசத்தின் கண்', தமிழ்மணி மானா மக்கீன் பெற்றுக் கொள்கிறார்.
பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அரபு மொழி பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம். எஸ். எம். ஜலால்தீன் கலந்து கொள்கிறார். சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி, காவ்யாபிமானி கலைவாதி கலீல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் வரவேற்புரை நிகழ்த்த கவி வாழ்த்துகளை கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன் (செயலாளர் - வகவம்), கலாபூசணம் மஸீதா அன்சார் ஆகியோர் வழங்குவர். பன்னூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத் நூல் நயவுரையாற்றுவார். ஏற்புரையை நூலாசிரியர் கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் நிகழ்த்த நிகழ்ச்சிகளை கவிஞர் ரஷீத் எம்.றியாழ், செல்வி இம்ரா இம்தியாஸ் ஆகியோர் தொகுத்து வழங்குவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM