இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

Published By: Ponmalar

01 Jun, 2023 | 11:53 AM
image

உடற்பயிற்சி கூடமொன்றில் தீவிரமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் இளைஞர் ஒருவர், திடிரென்று சரிந்து விழுந்து மரணமடைகிறார். திருமண விழா ஒன்றில் பங்குபற்றி நடனமாடிய இளம் வயதுள்ள ஆண் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கிறார்.

இது போன்ற  பல சம்பவங்கள், ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் மருத்துவ வல்லுனர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்ட இளம் வயதினருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதாக கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு மருத்துவ மொழியில் இதற்கு ஹைப்பர்டிராபிக் கார்டியோமயோபதி என குறிப்பிடுகிறார்கள்.

இத்தகைய பாதிப்பு பரம்பரை மரபணு மாற்றத்தினால் ஏற்படுகிறது என மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அதாவது உங்களது உறவினர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு, மரணமடைந்திருந்தால் அவர்களின் பரம்பரையில் இருப்பவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம்.

மேலும் சிலருக்கு மரபணு மாற்றம் காரணமாக இதய தசைகளில் இயல்பான அளவை விட அதன் சுவரின் தடிமன் அதிகரித்து விடும்.

இதன் காரணமாக இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தில் தடையோ அல்லது அடைப்போ ஏற்படுகிறது. இதன் காரணமாக இதயத்துடிப்பு சமச்சீரற்ற தன்மைக்கு உயர்ந்து, மாரடைப்பையோ அல்லது இதய செயலிழப்பையோ ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்குகிறது.

மேலும் இது எந்தவித அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் திடீரென்றும் தாக்கக்கூடும். இதன் காரணமாக இளம் வயதினர் தங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கும் முன், இதய ஆரோக்கியம் குறித்தும், இதய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறு குறித்தும். முறையான பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பாரம்பரிய மரபணு மாற்றம் காரணமாக உங்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறு இருந்தால், அதனை மருத்துவர்கள் துல்லியமாக அவதானித்து அதை தவிர்ப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

ஹைப்பர்டிராபிக் கார்டியோமயோபதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, எக்கோ கார்டியோகிராம் ,எலக்ட்ரோ கார்டியோகிராம், கார்டியாக் எம் ஆர் ஐ, ஸ்ட்ரெஸ் டெஸ்ட்.. ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அவர்கள் மருந்து, மாத்திரை, இயன்முறை சிகிச்சை, மின்னாற்றல் சிகிச்சை என பல்வேறு சிகிச்சைகளில் இதற்கு நிவாரணத்தை வழங்குகிறார்கள். வெகு சிலருக்கு மட்டும் சத்திர சிகிச்சை செய்து பிரத்யேக கருவியை பொருத்தி நிவாரணத்தை வழங்குகிறார்கள்.

எனவே இளைய தலைமுறையினர் உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது உழைத்துக் கொண்டிருக்கும் போதோ நெஞ்சு வலி, மூச்சு திணறல், மார்பக வலி.. போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து, அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு, எம் மாதிரியான பாதிப்பு என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் சிலருக்கு இத்தகைய பாதிப்பின் காரணமாக இதய தசைகளில் உள்ள செல்கள் சிதைந்து சீர்குலைந்து விடும். இது சீரற்ற இதயத் துடிப்பை உருவாக்கி, பாரிய அச்சுறுத்தலை உண்டாக்கும்.

டொக்டர் துர்கா தேவி


தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடற்பயிற்சியின் மூலம் வலிகளை குணப்படுத்துவோம் -...

2023-09-25 15:49:32
news-image

ஹலிடோசிஸ் எனும் வாய் துர்நாற்ற பாதிப்பிற்குரிய...

2023-09-25 12:36:36
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் டாக்கிங் தெரபி...

2023-09-23 15:38:51
news-image

கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

2023-09-22 13:05:56
news-image

பேறு காலத்தின் போது பெண்களுக்கு மார்பக...

2023-09-21 13:49:25
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பாதிப்பிற்குரிய...

2023-09-20 14:01:29
news-image

இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மூளை...

2023-09-19 17:09:39
news-image

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-09-18 14:21:13
news-image

நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

2023-09-16 17:06:10
news-image

உர்டிகாரியா பிக்மெண்டோசா எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2023-09-15 17:08:22
news-image

அலர்ஜிக்ரினிடீஸ் எனும் ஹே காய்ச்சல் பாதிப்பிற்குரிய...

2023-09-14 20:58:17
news-image

செப்ஸிஸ் (Sepsis) குறித்து அவதானமாக இருப்போம்: ...

2023-09-14 11:53:53