சென்னை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்கும் பணியில் அவர் தீவிரமாக இறங்கி உள்ளார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என உறுதியாக தெரிவித்து வரும் சீமான் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் தான் இன்று திடீரென்று சீமானின் ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. @SeemanOfficial என்ற அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில், ‛‛சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டுவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல’’ என சீமானின் ட்விட்டர் பக்க முடக்கத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM