நிலைபேறாண்மை மூலோபாயத்தை செயல்படுத்தியதற்காக DFCC வங்கிக்கு இரட்டை விருதுகள்

Published By: Digital Desk 5

01 Jun, 2023 | 10:04 AM
image

DFCC வங்கியானது, வங்கி முழுவதும் அதன் நிலைபேறாண்மை மூலோபாயத்தை செயல்படுத்தியதற்காக வங்கிச்சேவைப் பிரிவில் வெற்றியாளராகவும், 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் மேன்மைக்கான விருதும் வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. The Institute of Chartered Professional Managers of Sri Lanka ஏற்பாடு செய்த 2023 ஆம் ஆண்டின் சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன விருதுகள் 2023 நிகழ்வில் DFCC வங்கிக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

வங்கியின் முதன்முதல் முறைசார் நிலைபேறாண்மைக் கொள்கை, மூலோபாயம் மற்றும் திட்டம் ஆகியவை 10 வருட காலத்திற்கானதாக 2020 இல் உருவாக்கப்பட்டன. இத்துறைகளில் அதன் வரலாற்று சாதனைகளை அத்திவாரமாகக் கொண்டு இவை கட்டியெழுப்பப்பட்டன. இதன்படி, DFCC வங்கியானது, நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் எழுதிறன் கொண்ட இலங்கையை நோக்கி பங்களிப்பதற்கும், நிலைபேண்தகு பணியிடங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதற்கான சாதகமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடனும், 2030 ஆம் ஆண்டளவில் நிலைபேறாண்மைக்கு பங்களிப்புச் செய்யும் முன்னணி வங்கியாக மாறுவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கியால் நிதியளிக்கப்படும் திட்டங்கள் தேவையான அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக விதிமுறைகளையும் பின்பற்றி, அவற்றைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் அதே வேளையில், இத்துறை தொடர்பான சுற்றுச்சூழல் மற்றும் சமூக அபாயங்களைக் குறைப்பதற்காக சமூக மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவக் கட்டமைப்பை (Social and Environmental Management System - SEMS) கடந்த சில ஆண்டுகளாக வங்கி செயல்படுத்தியுள்ளது.

சொனாலி ஜயசிங்க சிரேஷ்ட துணைத் தலைவர் - மனிதவளத் துறைத் தலைவர் மற்றும் நில்மினி குணரத்ன – துணைத் தலைவர்/ சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேறாண்மைக்கான தலைவர் ஆகியோர் விருதுகளை ஏற்றுக்கொள்கின்ற காட்சி.      

விருது வழங்கும் நிகழ்வில் DFCC அணி.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Fems H.E.R. மையத்தினால் இலங்கையின் பெண்களுக்கு...

2023-09-18 19:45:01
news-image

இலங்கையில் அதிகம் விரும்பப்படும் மிகச்சிறந்த 10...

2023-09-12 10:07:55
news-image

புதிய வளாகத்துடன் கூட்டாண்மை வங்கியியல் அனுபவத்தை...

2023-09-11 16:36:47
news-image

மக்கள் வங்கி 2 மில்லியனுக்கும் அதிகமான...

2023-09-11 16:43:37
news-image

"லிபேரா ஜூனியர்" பிரமாண்டமான வெளியீட்டு விழா

2023-09-11 11:20:19
news-image

சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள்...

2023-09-04 12:21:42
news-image

தரத்திற்கான அங்கீகாரம் : IDL இன்...

2023-08-31 20:07:15
news-image

ரூபா 9.4 பில்லியன் தொகையை வரிக்கு...

2023-08-31 16:56:39
news-image

யாழ்ப்பாணத்தின் அழகை உலகுக்கு எடுத்துச் செல்லும்...

2023-08-31 21:54:09
news-image

குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவோம் :...

2023-08-25 15:40:33
news-image

இலங்கை காப்புறுதியாளர்கள் சங்கத்தின் இரத்த தானம்

2023-08-25 11:13:04
news-image

மக்கள் வங்கி, சர்வதேச இளைஞர் தினத்தில்...

2023-08-24 21:20:43