(எம்.மனோசித்ரா)
இராணுவ போர்க்கருவி தொழிற்சாலை அதன் சொந்த தொழில்நுட்பம் மற்றும் தொழில் நிபுணத்துவத்தை உபயோகித்து இராணுவத்தின் தேவைகளில் கணிசமானவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் இராணுவம் பாரிய பங்களிப்பை வழங்குவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் முக்கிய சொத்தாக கருதப்படும் இந்த வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும், பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ போர்க்கருவி தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வேயங்கொடையில் உள்ள இராணுவ போர்க்கருவி தொழ்ற்சாலைக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சருக்கு மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க மற்றும் இராணுவ போர்க்கருவி தொழிற்சாலையின் கட்டளைத் அதிகாரி பிரிகேடியர் ஆனந்த ஜயரத்ன ஆகியோர் போர்க்கருவி தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மற்றும் உற்பத்திகள் குறித்து விளக்கமளித்தனர்.
இலங்கை இராணுவ போர் சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் ஜீ.ஏ முனசிங்க மற்றும் மேற்படி நிலையத்தின் பொருப்பாளர் கேர்ணல் கே.எம். ஏ. டபிள்வு. கே பேரேரா உட்பட இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM