சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 5

31 May, 2023 | 08:34 PM
image

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பேசப்பட்டு வந்த இவ்வாறான பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்..

மறைந்த திரு.ரெஜி ரணதுங்கவின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு, உடுகம்பலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெற்றிபெறாத செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்திற்கு எதிராக மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்ட முயற்சிப்பதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். எந்தவொரு குழுவும் தேசிய அரசாங்கத்திற்கு வந்தால் அதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி நடைமுறைப்படுத்துவார்  எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அவ்வேளையில்  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு.

கேள்வி – அமைச்சரே!  புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமா?

பதில் - இல்ல. இது கடந்த காலத்திலிருந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிகளை தீர்க்க தேசிய அரசாங்கத்தை அமைக்க வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு இன்னொரு வாய்ப்பும் உள்ளது. எதிர்காலத்தில் தேசிய அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் அதற்காக ஒரு குழு ஒன்று கூடினால் அதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி சிந்தித்து செயற்படுத்துவார்.

கேள்வி - உங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் அமைச்சர் பதவிகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அல்லது எதிர்க்கட்சிக்கு செல்வதாக கூறியுள்ளார்களே?

பதில் - அப்படி யாரும் கேட்கவுமில்லை. கொடுக்கவில்லையென்றால் போவதில்லை என்று சொல்லவுமில்லை. இவை ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகள். நாட்டின் தற்போதைய நிலை குறித்து அனைவருக்கும் புரிந்துணர்வு உள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு நாம் அனைவரும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறோம், ஆனால் இந்த நேரத்தில் எண்ணிக்கையை அதிகரிக்க யாரும் எதையும் செய்யவில்லை.

கேள்வி - ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்ததை நேற்று பார்த்தோம். 15 நாட்களுக்குள் அமைச்சர் பதவி தராவிட்டால் எதிர்க்கட்சிக்கு செல்வதாக?

பதில் - வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கட்சி என்ற ரீதியில் அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அக்கட்சியின் செயலாளரும் அண்மையில் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

கேள்வி - இப்போது மதப் பிரச்சினை பெரிதாகி வருவதைக் காண்கிறோம். இதை ஒரு அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளும்?

பதில் - இவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூகப் போராட்டத்தை உருவாக்கி, நாட்டை அழித்து, மக்களைக் கொன்று, வீடுகளை எரித்து, ஜனாதிபதியையும், மகிந்தவையும் கொல்வதற்கான திட்டங்கள் இருந்தன. அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார்? அவர்களுக்கு யார் பணம் செலவழித்தது? சமூகப் போராட்டம் தோல்வியடைந்ததால், இப்போது மதங்களுக்கு இடையே நெருக்கடியை உருவாக்கப் பார்க்கின்றார்கள். இது வெற்றி பெறாவிட்டாலும் இனவாதத்தை உருவாக்க முயல்வார்கள். ஊடகவியலாளர்களாகிய நீங்கள் இந்த விடயங்கள் யாருடைய நலனுக்காக என்று சிந்தியுங்கள். போராட்டத்தின் போது வெசாக்கிற்கு கறுப்புக்கொடி ஏற்றி கறுப்பு வெசாக் கூடு கட்டியவர்கள் இன்று மதத்திற்காக பேசுகின்றனர். போராட்டத்தில் இருந்த கலைஞர்கள் செய்ததை நாடு பார்க்கிறது. இதற்கு யார் பணம் செலவிடுவார்கள்? இதனை நாடு புரிந்து கொள்ள வேண்டும். வெசாக் பண்டிகைக்கு கறுப்புக்கொடி ஏற்றுவது நல்லது என மதவாதத்தை முன்வைத்தவர் மட்டுமன்றி சில பிக்குகளும் தெரிவித்துள்ளனர். முடிவுகள் வருகின்றன. இன்று எந்த மாதிரியான மனிதர்கள் முறை மாற்றத்தை உருவாக்க வந்தார்கள் என்று நாட்டுக்கே தெரியும். சிலர் யூடியூப் சென்று எப்படி பணம் கிடைத்தது என்று கூறியதை பார்த்தேன். அங்கு வெவ்வேறு நபர்கள் இருந்தனர். பாதாள உலக மக்கள், விபச்சாரிகள் இருந்தனர்  என்று ஆரம்பத்தில் சொன்னபோது, எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. என்னை திட்டினார்கள் ஆனால் இப்போது அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அமைப்பு மாற்றம் என்பது இதுவல்ல. நாட்டில் மாற்றம் என்பது ஆட்சி மாற்றத்தைக் குறிக்காது. வழிமுறையில் மாற்றம் வர வேண்டும். அதற்கு மக்களின் அணுகுமுறையில் மாற்றம் தேவை. இதை புரிந்து கொள்ள வேண்டும். பொய் என்ற பெயரில் வெறுப்பை பரப்பி செய்த போராட்டத்தின் பலனை இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.

கேள்வி - சர்வதேச அமைப்புக்கள் கூட பேச்சு சுதந்திரம் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனவே வேறு எப்படி இது பேசப்படுகிறது?

பதில் - நீங்கள் குறிப்பிடும்  நாடுகளில் அவற்றைச் செய்ய உங்களுக்கு அனுமதி உள்ளதா? முன்னேற்றமடைந்துள்ளது என்று நிலையான ஜனநாயகம் பற்றி அதிகம் பேசும் நாடுகள் சிறு நாடுகளை மிதிக்கின்றன, ஆனால் அந்த நாடுகளில் அப்படி நடக்கிறதா என்று கண்டுபிடியுங்கள்.

கேள்வி - தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தங்கத்துடன் பிடிபட்டாலும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இல்லையா?

பதில் - இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தெளிவாக அனுமதித்துள்ளது. நாங்கள் யாரையும் காப்பாற்ற செல்லவில்லை. நாங்கள் அவருக்கு உதவாத காரணத்தால்,  அவர் தனது வாக்கை இவ்வளவு முக்கியப் பிரேரணையில் எமக்கு எதிராக வாக்கைப் பயன்படுத்தினார். அரசாங்கம் என்ற ரீதியில் அவர்களுக்கு உதவ மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம உள்ளனர்.

கேள்வி - அவர் கூறும் கருத்துக்கள் உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் பாதகமாக உள்ளது அல்லவா? இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில் - அவர் தவறு செய்துவிட்டார். அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். நாங்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம். அவருக்கு சட்டத்தை அமுல்படுத்துத்துவோம். அரசியல்வாதிகளை சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளோம். சட்டவிரோதமான வேலைகளில் நாங்கள் தலையிடுவதில்லை.

கேள்வி - சீன பிரஜை ஒருவரை இந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். என எதிர்க்கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கு அரசு என்ன சொல்கிறது?

பதில் - இது குறித்து அரசாங்கம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது. அவர்களை அரசு தடுக்காது. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை அரசு செய்கிறது. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு கிடையாது. தமது கட்சியாயிருந்தாலும் தங்கம் கொண்டு வந்த நபருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அத்தகைய தண்டனை பெற்ற பிறகு பாராளுமன்றம் வருவதா வேண்டாமா என்று அந்த நபர் தீர்மானிக்க வேண்டும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அத்தனகலு ஓயாவில் காணாமல்போன சிறுவன் சடலமாக...

2024-06-24 20:47:23
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய கடைத் தொகுதியில் கசிப்பு...

2024-06-24 20:49:03
news-image

முச்சக்கரவண்டி - உழவு இயந்திரம் மோதி...

2024-06-24 20:45:43
news-image

கட்சி யாப்பின் பிரகாரம் நானே ஸ்ரீலங்கா...

2024-06-24 20:42:56
news-image

கல்கமுவையில் முச்சக்கரவண்டி விபத்து ; ஒருவர்...

2024-06-24 20:42:33
news-image

15 நாட்களாக காணாமல்போயிருந்த முதியவர் வயலிலிருந்து...

2024-06-24 20:36:51
news-image

குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை தொடர்பாக...

2024-06-24 17:17:57
news-image

அரசாங்கத்திலுள்ள அரசியல் மூடர்களின் விளையாட்டுக்கள் இரண்டே...

2024-06-24 19:15:14
news-image

போதைப்பொருட்களுடன் 682 பேர் கைது

2024-06-24 20:39:08
news-image

வெல்லவாயவில் சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய...

2024-06-24 18:44:36
news-image

சமூக ஊடகங்கள் வாயிலாக மோசடி :...

2024-06-24 17:19:11
news-image

வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சத்தியாக்கிரக...

2024-06-24 17:23:59