கம்பளை - துன்ஹிந்த பிரதேசத்தில் மஹாவலி ஆற்றில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 5 இளைஞர்கள் இவ்வாறு நீராடச் சென்றுள்ள நிலையில்,அதில் 3 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மூவரும் ஏத்கால மற்றும் உடகம பிரதேசத்தினை சேர்ந்த 13 வயது நிரம்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார், பிரதேச மக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்