ஐபிஎல் 2023 இன்இறுதிப்போட்டியின் விதியை மாற்றிய கடைசி ஓவர் குறித்து அந்த ஓவரை வீசிய மோகித்சர்மா மனம்திறந்துள்ளார்.
ஐபிஎல் இறுதிப்போட்டியின் முடிவு ஒருபக்கம் பரவசமும் மறுபக்கம் வேதனையும் கலந்த மற்றொரு கதை.
அகமதாபாத்தின் நரேந்திரமோடி மைதானத்தில் மிகவும் அற்புதமான விதத்தில் ரவீந்திர ஜடேஜா வெற்றிக்கான ஓட்டங்களை பெற்றதும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கொண்டாட்டம் ஒரு காவியம் போன்று காணப்பட்டது,அதேவேளை இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவை என்ற இலக்கை தனது பந்து வீச்சால்கட்டுப்படுத்த முடியாத மோகித்சர்மா முற்றிலும் மனமுடைந்து போனார்.கண்ணீர் விட்டுஅழுதார்.
இந்த போட்டி குறித்து இறுதி ஓவரை வீசிய மோகித் சர்மா மனம் திறந்துள்ளார்.
கடந்தகாலங்களில் பலதடவை இவ்வாறான நிலையில்இருந்துள்ளதால் தன்னிடம் தெளிவான திட்டங்கள்காணப்பட்டதாக மோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஓவருக்கு முந்தைய ஓவரில் மோகித்சர்மா சிறப்பாக பந்துவீசியிருந்தார் அடுத்தடுத்து இரண்டு விக்கட்களை வீழ்த்தியிருந்தார்.
என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நான் தெளிவாகயிருந்தேன் வலைப்பயிற்சிகளில் நான் அவ்வாறான சூழ்நிலைக்கு பழக்கப்பட்டிருந்தேன் ஆகவே நான் அந்த ஓவரில் யோக்கர் பந்துகளை வீச தீர்மானித்தேன் என மோகித்சர்மா தெரிவித்துள்ளார்.
முதல் நான்குபந்துகளை யோர்க்கர் பந்துகளாவே வீசிய அவர் மூன்று ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்திருந்தார்.
மோகித் நம்பிக்கையோடு காணப்பட்ட போதிலும் அணித்தலைவர் பாண்ட்யா அவருடன்சில செகன்ட்கள் உரையாடினார்,
அது குறித்து தெரிவித்துள்ள மோகித்சர்மா அவர் நான் என்ன செய்யப்போகின்றேன் என கேட்டார் நான் தொடர்ந்தும் யோர்க்கர் பந்துகளை வீசப்போகின்றேன் என தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
பண்;ட்டியாவிற்கும் எனக்கும்இடையிலான அந்த உரையாடல்குறித்து பலர் பலவிதமாக கருத்து தெரிவிக்கின்றனர் ஆனால் அதில் ஒன்றும் இல்லை எனக்கு நான் என்ன செய்யவேண்டும் என்பது தெரியும் என மோகித் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த உரையாடலால் எதிர்மறையான பாதிப்பே ஏற்பட்டது அதுவரை சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்த மோகித் தனது லைனில்தவறினார்-
யோர்க்கரை தவறாக வீசியதால் ஜடேஜா அதனை தூக்கிசிக்சர் அடித்தார்.
எனினும் மோகித் நம்பிக்கையுடன் காணப்பட்டார்-முதல் நான்கு பந்துகளை போல வீச நினைத்தார், ஜடேஜாவின் கால்களை கால்விரல்களை இலக்குவைத்து யோக்கர் பந்தினை வீச நினைத்தார்.
நான் யோக்கரை வீச திட்டமிட்டேன்ஆனால் பந்து எங்கு விழவேண்டுமோ அங்கு விழவில்லை நான் என்னால் முடிந்தவரை சிறப்பாக முயற்சி செய்தேன் என மோகித்சர்மா தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது திட்டப்படி அது அமையவில்லை அது லோபுல்டொஸாக மாறியது ஜடேஜா அதனை தட்டிவிட்டார் அது பைன்லெக்கில் எல்லைக்கோட்டை கடந்து வெற்றி பவுண்டரியாக மாறியது.
நான் அன்றிரவு உறங்கவில்லை என மோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM