ஜோகோவிச்சுக்கு எதிராக ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோசோவோ ஒலிம்பிக் குழு கோரிக்கை

Published By: Vishnu

31 May, 2023 | 03:06 PM
image

(நெவில் அன்தனி)

சேர்பியாவுக்கும் கொசோவோவுக்கும் இடையில் பதற்றம் மற்றும் வன்முறையின் அளவை அதிகரிக்கச் செய்யும் வகையில் கருத்து வெளியிட்ட நோவாக் ஜோகோவிச்சுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொசோவோ ஒலிம்பிக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

'சேர்பியாவின் இதயம் கொசோவோ, வன்முறையை நிறுத்தவும்' என்ற வாக்கியத்தை கெமரா வில்லையில் ஜோகோவிச் எழுதினார்.

ரோலண்ட் கெரொஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான முதலாம் சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் அலெக்சாண்டர் கொவாசேவிச்சை வெற்றிகொண்ட பின்னரே ஜோக்கோவிச் இந்த வாக்கியத்தை எழுதினார்.

இதனால் மனம் நொந்துபோன கொசோவோ ஒலிம்பிக் குழுத் தலைவர் இஸ்மத் க்ராஸ்னிக்கி, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச்சுக்கு    எழுதிய கடிதத்தில் ஜோக்கோவிச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

அக் கடிதத்தில், 'நாங்களும் இந்த உலகமும் நேற்றைய தினம் மற்றொரு சம்பவத்தை பார்த்தோம். இம்முறை சேர்பிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் வாக்கியம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதன் மூலம் அவர் மீண்டும், மூன்றாவது தடவையாக விளையாட்டுத்துறை கொள்கைகளை மீறினார். அத்துடன் அரசியல் நடுநிலைமையையும் ஒலிம்பிக் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளையும் அவர் மீறினார். 

'சேர்பிய தேசியவாத பிரசாரத்தை மீண்டும் ஊக்குவிக்க நோவாக் ஜோகோவிச் அதனை செய்வதற்காக விளையாட்டுத்துறையை ஒரு மேடையாகப் பயன்படுத்தியுள்ளார்.

'போட்டி முடிவடைந்த பின்னர் எவ்வித வருத்தமோ உணர்வோ இல்லாமல் பொது நபரால் வெளியிடப்பட்ட அறிக்கைகள், சேர்பியா மற்றும் கோசோவோ ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையே பதற்றம் மற்றும் வன்முறையின் அளவை நேரடியாக அதிகரிக்கச் செய்துள்ளன.

'கொசோவோ ஒலிம்பிக் குழுவின் தலைவர் என்ற வகையில், இது தண்டிக்கப்படாவிட்டால் இந்த தகவல்களும் செயல்களும் எதிர்கால விளையாட்டுத்துறைக்கு ஆபத்தை விளைவிக்கும்.

எனவே இது தொடர்பாக எனது கரிசணையை வெளியிட வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது. மேலும் சர்வதேச ஒலிம்பிக் குழு சார்பாக பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் சாசனத்தின் 5ஆவது பிரிவை மீறியதற்காக ஜோகோவிச்சிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

'விளையாட்டு நிகழ்ச்சிகள் சமூகத்தின் கட்டமைப்புக்குள் நடைபெறுகிறது என்பதை அங்கீகரித்து, ஒலிம்பிக் இயக்கத்தின்கீழ் செயற்படும் விளையாட்டுத்துறை அமைப்புகள் அரசியல் நடுநிலையை பேணவேண்டும்' எனவும் கொசோவோ ஒலிம்பிக் குழுத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

'விளையாட்டுத்துறை கோட்பாடுகள், ஒலிம்பிக் தார்ப்பரியம், ஒலிம்பிக் சாசனம் ஆகியவற்றை மீறும் வகையில் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியின்போது இடம்பெற்றதாக இந்த சம்பவத்தை கருதவேண்டும்' என க்ராஸ்னிக்கி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

'நோவாக் ஜோகோவிச் உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவர் என்பதை மறுக்கமுடியாது. ஆனால், அரசியல் கருத்துக்கள், நிகழ்ச்சி நிரல்கள், பிரசாரங்கள் போன்ற செயல்களுக்கு விளையாட்டுத்துறையை ஒரு மேடையாகப் பயன்படுத்தும் ஆபத்தான முன்மாதிரியை அனுமதிக்க முடியாது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சேர்பிய டென்னிஸ் நட்சத்திரம் ஜோகோவிச்சை அந் நாட்டு டென்னிஸ் சம்மேளன உதவித் தலைவர் ஜெட்டோன் ஹாதர்கோனாஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59
news-image

ஆசிய விளையாட்டு விழாவை சீன ஜனாதிபதி...

2023-09-24 06:49:46
news-image

ஷமி 5 விக்கெட் குவியல், நால்வர்...

2023-09-23 10:53:17
news-image

19ஆவது ஆசிய விளையாட்டு விழா சினாவின்...

2023-09-23 10:25:11
news-image

அருணாச்சலப் பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா விசா...

2023-09-23 09:42:09
news-image

ஐ.சி.சி. உலகக் கிண்ண சம்பியனுக்கு பணப்பரிசு...

2023-09-23 09:41:43